அசரடித்த ஆட்டோ டிரைவர்! பெங்களூரில் ரூ.5 கோடிக்கு 2 சொந்த வீடு.. மாத வாடகையாக ரூ.3 லட்சம் வருதாம்
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரூ.4 முதல் ரூ.5 கோடி மதிப்பிலான 2 சொகுசு வீடு வைத்துள்ளதாகவும், மாதம் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை வாடகை வருவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

தற்போது வாடகை கார்கள், பைக் டாக்ஸிகளின் செயல்பாடு ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பைக்டாக்ஸிக்கு எதிராக ஆட்டோ டிரைவர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் கூட தினமும் கணிசமான வருமானம் ஆட்டோ டிரைவர்களுக்கு கிடைத்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வரும் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் ரூ.4-5 கோடி மதிப்பிலான 2 வீடு வைத்துள்ளதாகவும், வாடகை மட்டும் மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது பெங்களூரில் இன்ஜினியராக இருக்கும் ஆகாஷ் அனந்தனி என்பவர் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது அவர் ஏறிய ஆட்டோ டிரைவர் பார்க்க வித்தியாசமாக இருந்தார்.
ஆட்டோ டிரைவர் தனது கையில் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தார். மேலும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் வைத்திருந்தார். இதனால் ஆகாஷ் அனந்தனிக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதனால் ஆட்டோ டிரைவரிடம் அதுபற்றி கேட்டார். அப்போது அவர் கூறிய தகவல் தான் அதிர வைத்துள்ளன.
இதுபற்றி ஆகாஷ் ஆனந்தனி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பெங்களூரில் ஆட்டோ டிரைவராக இருக்கும் ஒருவர் தனக்கு ரூ.4-5 கோடி மதிப்பிலான 2 வீடு இருப்பதாகவும் கூறினார். அந்த 2 வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளதாகவும், மாதம் ரூ.2-3 லட்சம் வாடகை வருவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமின்றி ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாராம்'' என்று கூறியிருந்தார்.
Bangalore is fucking crazy the auto wala bhaiya said he has 2 houses worth 4-5 crs 😭 both on rent earns close to 2-3 lakhs per month , and is a startup founder / investor in a ai based startup bruh 😭😭😭
— Akash Anandani (@Kashh56) October 4, 2025
இந்த பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி இந்த பதிவை மொத்தம் 65,500 பேர் பார்த்துள்ளனர். 1,400 பேர் லைக் செய்துள்ளனர். 75 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 118 பேர் கமெண்ட் செய்துள்ளனர். பலரும் அவரது பதிவை பார்த்து வியந்து போய் உள்ளனர். இதுதொடர்பாக ஒருவர், ‛‛பெங்களூர் ஏன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைநகராக இருக்கிறது என்றால் ஆட்டோ டிரைவர்கள் கூட முதலீடு செய்கிறார்கள்'' என பெருமைப்பட்டுள்ளார். இன்னொருவரோ, ‛‛அவர் முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் இது நம்பும் படியாக இருக்கிறது'' என்றார்.
அதேபோல் வேடிக்கையாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், ‛‛இது பாலிவுட் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் போல் தெரிகிறது'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛முதலீடு செய்யக்கூடிய சாத்தியமான நிறுவன நிறுவனர்களை சந்திக்க சரியான வழி இதுதான் என்று அவர் ஆட்டோ டிரைவராக இருக்கலாம்'' என்றார். அதாவது பெங்களூரில் நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அடிக்கடி ஆட்டோக்களில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி அவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவரோ, ‛‛இது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் பெங்களூரில் தனிமையான வாழ்க்கை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் அதிக வருமானம் ஈட்டும் பலர் பொழுதுபோக்கிற்காக ஆட்டோ, கார்களை ஓட்டி வருகின்றனர். இதுபோன்ற நிறைய விஷயங்களை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications