நெஞ்சுவலியால் பலியான பிஎம்டிசி பஸ் டிரைவர்.. 50 பேரை காப்பாற்ற கண்டக்டர் செய்த செயல்! என்ன ஸ்பீடு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பிஎம்டிசி அரசு பஸ்சை ஓட்டி சென்றபோது டிரைவர் நெஞ்சுவலியால் சரிந்து விழுந்து இருக்கையில் இறந்தார். இதை கவனித்த கண்டக்டர் உடனடியாக டிரைவர் இருக்கையில் குதித்து அமர்ந்து பஸ்சை நிறுத்தி 50 பேரின் உயிரை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பெங்களூரில் பிஎம்சிசி எனும் மாநகர அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்கள் பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

bmtc bus karnataka

இந்த பிஎம்டிசி போக்குவரத்து கழகத்தின் 40வது டெப்போவில் கிரண் குமார் (வயது 30) டிரைவராக பணியாற்றி வந்தார். அதேபோல் ஓபலேஷ் என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் இருவரும் இன்று பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா - தாசனபுரா இடையேயான வழித்தடத்தில் பஸ்சை இயக்கி வந்தனர். பஸ்சை கிரண் குமார் ஓட்டினார். ஓபலேஷ் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ் நெலமங்களாவில் இருந்து தாசனபுரா நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் பயணித்தனர்.

இன்று காலை 11 மணியளவில் யஷ்வந்தரபுரத்தில் சென்றபோது திடீரென்று டிரைவர் கிரண் குமார் தனது இருக்கையில் இருந்து அப்படியே சரிந்து விழுந்தார். இதை கண்டக்டர் ஓபலேஷ் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் டிரைவர் இருக்கையை நோக்கி ஓடிவந்த நிலையில் முன்னால் சாலையோரம் நின்ற பஸ் மீது மோதியது.

அதோடு பஸ் நிற்காமல் தொடர்ந்து சாலையில் சென்றது. அப்போது சுதாரித்த கண்டக்டர் ஓபலேஷ் ஸ்டியரிங்கை பிடித்து கண்ட்ரோல் செய்தார். இதனால் பஸ் சாலையிலேயே சென்றது. அதன்பிறகு அவர் டிரைவர் சீட்டுக்கு ஜம்ப் செய்து அமர்ந்து பிரேக்கை பிடித்தார். இதனால் பஸ் விபத்தில் சிக்காமல் நின்றது. மேலும் பஸ்சில் இருந்த 50 பயணிகளும் காயமின்றி தப்பித்தனர்.

இதையடுத்து கண்டக்டர் ஓபலேஷ் டிரைவர் கிரண் குமாரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு கிரண் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பஸ் ஓட்டியபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் பலியானதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தான் ஓடும் பஸ்சில் டிரைவர் கிரண் குமார் நெஞ்சு வலியால் சரிந்து விழுவதும், கண்டக்டர் ஓபலேஷ் சமயோசித்தமாக யோசித்து பஸ்சை நிறுத்தியதும் பஸ்சுக்குள் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் கண்டக்டர் ஓபலேசை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+