கொடுமைதான்.. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கவுன்சிலரை.. சிறைக்கு அனுப்பிய 'அண்ணனின் அடி விழுதுகள்'

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பெங்களூர் நகர கவுன்சிலரை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டது அவரது ஆதரவாளர்களின் செயல்.

பெங்களூரு நகரின் பாதராயணபுரா பகுதி, சில வாரங்கள் முன்புவரை, கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இங்கு சிகிச்சை அளிக்கச் சென்ற மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு சென்ற மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஏரியா மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்ட அந்த பகுதியில், கொரோனா நோய் பாதித்த பலருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தனர்.

மஜத கட்சி கவுன்சிலர்

மஜத கட்சி கவுன்சிலர்

இந்த பாதராயணபுரா வார்டு கவுன்சிலராக இருப்பவர் இம்ரான் பாஷா. தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒருவழியாக குணப்படுத்தப்பட்டு, நேற்றுதான் வீடு திரும்பினார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றுக்கொண்டு இருந்தது. ஆனால், இம்ரான் பாஷா ஆதரவாளர்கள் செய்த சேஷ்டை இருக்கே.. அங்குதான் சிக்கல் எழுந்தது. ஆதரவாளர்கள், நூற்றுக் கணக்கில் கூட்டமாக கூடி இவர் குணமடைந்து வந்ததை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, கட்டியணைத்து, சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டு, இந்த கொண்டாட்டம் தூள் பறந்தது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றுக்கொண்டு இருந்தது. ஆனால், இம்ரான் பாஷா ஆதரவாளர்கள் செய்த சேஷ்டை இருக்கே.. அங்குதான் சிக்கல் எழுந்தது. ஆதரவாளர்கள், நூற்றுக் கணக்கில் கூட்டமாக கூடி இவர் குணமடைந்து வந்ததை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, கட்டியணைத்து, சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டு, இந்த கொண்டாட்டம் தூள் பறந்தது.

சாலை முழுக்க கோலாகலம்

சாலை முழுக்க கோலாகலம்

மருத்துவமனையில் இருந்து கவுன்சிலர் தனது காரில் வீட்டுக்கு திரும்பும் வரை சாலை நெடுக, இந்த கொண்டாட்டம் நீடித்தது. கவுன்சிலரின் காரின் இருபக்கமும் தொண்டர்கள் ஏறி நின்றனர். சுற்றிலும் பைக் மூலம் வட்டம் அடித்தபடி பட்டாசுகளை வெடித்தபடி சாலையில் சென்ற மற்ற பொது மக்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்றனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாய்ந்த வழக்கு

பாய்ந்த வழக்கு

இந்த நிலையில் ஜே ஜே நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் இம்ரான் பாட்ஷாவை கைது செய்துள்ளனர். இதையடுத்து பாதராயணபுரா பகுதியில் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12ஆம் தேதி வரை இந்த உத்தரவு நீடிக்கும். 2 பேருக்கு மேல் மொத்தமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பரவிய கொரோனா

பரவிய கொரோனா

சட்டப் பிரிவு 269, 270 மற்றும் 271 ஆகியவற்றின் கீழ், கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதராயணபுரா வார்டில் 11 பேருக்கு தான் தற்போது வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் கவுன்சிலருடன் சேர்ந்து விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அதில் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர்களோடு சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிறருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி இருக்கலாம். அது பின்னர் தான் தெரிய வரும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+