டெட் பாடி இருக்கு.. வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜ்.. அக்காவை பார்த்து அலறிய தம்பி.. குலுங்கிய பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் புதிதாக திருமணம் ஆன பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் மிகவும் பிசியாக இருக்கும் பகுதிகளில் ஒன்று பிடிஎம். அடுத்தடுத்து வீடுகள் இருக்கும் நெருக்கடியாக இந்த பகுதியில் உள்ள சுபாஷ் நகரில்தான் இந்த கொலை நடைபெற்று உள்ளது.

போலீசாரையும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களையும் இந்த ஒற்றை கொலை உலுக்கி போட்டு உள்ளது. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு மெசேஜ் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே உடைத்து போட்டு உள்ளது.

சுபாஷ் நகர்

சுபாஷ் நகர்

பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வரும் ஆயுப் கானுக்கு நேற்று வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அவரின் மச்சான் நசீர் ஹுசைனிடம் இருந்து இந்த மெசேஜ் வந்துள்ளது. 30 வயதாகும் நசீர் ஹுசைன் அனுப்பிய மெசேஜில்.. உன்னுடைய அக்காவை கொன்றுவிட்டேன். வீட்டில்தான் உன் அக்கா நாஸ் கானமின் (22) உடல் இருக்கிறது. டெட்பாடி இங்கேதான் இருக்கிறது. வந்து எடுத்துக்கொண்டு செல் என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு பிணமாக நாஸ் கான் கிடக்கும் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளார்.

ஆயுப் கான்

ஆயுப் கான்

இந்த போட்டோவை பார்த்ததும் அவர் அலறி உள்ளார். என்ன நடந்தது என்று புரியாமல் ஆயுப் கான் தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார். தனது அக்கா நாஸ் வசித்து வரும் சுபாஷ் நகருக்கு பறந்து சென்றுள்ளார். நாஸ் - நசீர் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. நாஸ் பெங்களூரை சேர்ந்தவர். நசீர் கோயில்கத்தாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஒன்றாக எலக்ட்ரானிக் சிட்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் வேலை பார்த்த இடத்தில் காதலித்து உள்ளனர்.

ஒரே மதம்

ஒரே மதம்

ஒரே மதம் என்பதால் அந்த பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு உள்ளனர். இதையடுத்தே 6 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடந்து 6 மாதங்களாக இவர்கள் அந்த பெண்ணின் வீட்டில்தான் இருந்துள்ளனர். ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இவர்கள் தனியாக வீடு எடுத்து சுபாஷ் நகருக்கு குடிபெயர்ந்து உள்ளனர். இங்கே வீடு மாறியதில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் 8 வருடம் வித்தியாசம் என்பதால் அதுவே சண்டைக்கும் காரணமாக மாறி உள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு முற்றி அவ்வப்போது அது அடிதடி சண்டையாக மாறி உள்ளது. மனைவியை போட்டு அடிப்பது, சாப்பாட்டை வீசி எறிவது என்று மிக கொடூரமாக நந்தகுமார் நடக்க தொடங்கி உள்ளார்.

சண்டை

சண்டை

இந்த சண்டை முற்றுவே நசீர் குடி பழக்கத்திற்கும் அடிமை ஆகி உள்ளார். வாரத்திற்கு இரண்டு நாள் குடித்தவர் பின்னர் தினமும் குடிக்க தொடங்கி உள்ளார். அதன்பின் சம்பள பணத்தை கொடுக்காமல் மொத்தமாக எல்லா பணத்திற்கும் குடிக்க தொடங்கி உள்ளார். முக்கியமாக மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டு உள்ளார். இதையடுத்தே நசீர் நாஸை கொலை செய்துள்ளார். வாட்ஸ் ஆப் மெசேஜை பார்த்து வீட்டிற்கு சென்று பார்த்த போதுதான் நசீர் நாஸை கொலை செய்ததை அவரின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நசீர் தற்போது நீதிமன்ற கஸ்டடியில் எடுக்கப்பட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+