பெங்களூர் ஹோட்டலில் பெயரை பார்த்து ஏமாந்த நபர்.. அப்பள பொறிக்கு இப்படி ஒரு பெயரா? பில்லை பாருங்க
பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டல் ஒன்றிற்கு போன நபர், "மெனு கார்டை பார்த்துவிட்டு பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.. சுவையும் அப்படித்தான் இருக்கும் என்று மனதில் நினைத்து ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் ஆர்டர் வந்த பிறகு, என் தலைமுறையிலேயே மனம் நொந்து போய் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்களும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஹோட்டல் உணவுகள் என்றாலே சிலருக்கு அலாதி பிரியம் இருக்கும். ஹோட்டல்களுக்கு சென்று உள்ள மெனு கார்டை பார்த்துவிட்டு விதவிதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவார்கள். சில நேரங்களில் நாக்கிற்கு மட்டுமின்றி மனதிற்கும் ருசியை கொடுக்கும் வகையில் எதிர்பார்த்ததை விட சில உணவுகள் டேஸ்ட் ஆக இருக்கும்.

உணவு பெயரை பார்த்து ஆர்டர்
சில நேரங்களில் இது அப்படியே தலைகீழாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சாதாரண ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவு கூட இதற்கு எவ்வளவோ சூப்பராக இருக்கும்.. இதற்கு போய் இப்படி வாயில் நுழையாத பெயரை வைத்து ஏமாற்றிவிட்டார்களே என மனதிற்குள் புலம்பிக்கொண்டு வேண்டா வெறுப்பாக பில்லை கட்டிக்கொண்டு இனி இந்த ஹோட்டல் பக்கமே தலை வைக்கக் கூடாது என சில வாடிக்கையாளர்கள் திரும்பி பார்க்காமல் வரும் நிகழ்வுகளை பார்க்க முடியும்.
அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் ஒருவருக்கு நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அருண் ராஜ் என்பவர் பதிவிட்டுள்ளர். அதாவது, பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற அருண் ராஜ், அங்குள்ள உணவு மெனுவை பார்த்துவிட்டு Chilly-dusted gold fingers- என்ற உணவு பெயரை பார்த்து இருக்கிறார்.
என் தலைமுறையிலேயே..
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.. சுவையும் அப்படித்தான் இருக்கும் என்று மனதில் நினைத்துகொண்டு.. ஆர்டரை தட்டி விட்டு இருக்கிறார். சிறிது நேரத்தில் ஹோட்டல் சர்வர் ஆர்டரை எடுத்துக்கொண்டு வர.. எங்கே நாம் ஆர்டர் செய்த சில்லி பஸ்டட்டு கோல்டு பிங்கர்ஸ் காணோம் என்று தட்டில் சுற்றிலும் பார்த்து இருக்கிறார். ஆனால், அவருக்கு அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்துள்ளது.
அதாவது, Chilly-dusted gold fingers என்பது சாதாரன அப்பளம் என்று தெரிந்துள்ளது. இது பற்றி அவர் கூறுகையில், "என் தலைமுறையிலேயே உப்பு, மிளகாய் தூள் தூவிய அப்பளத்தை ரூ.150-க்கு வாங்கிய முதல் ஆள், நானாகதான் இருப்பேன்" என பதிவிட்டுள்ளார். அந்த ஹோட்டலின் மெனு கார்டையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் இந்த பதிவுக்கு தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "90-ஸ் கிட்ஸ்கள் கடைக்கு போகும் போது அம்மாவிடம் லஞ்சமாக வாங்கிய ஒரு ரூபாயில் 10 அப்பளத்தை வாங்கிக்கொண்டு கை விரலில் மாட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே வீட்டிற்கு நடைபோடுவார்கள்.
இந்த அப்பளத்திற்கு இப்படி ஒரு பெயரை வைத்து 150-க்கு பில்லையும் தீட்டியிருக்கிறார்களே என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற பல ஹோட்டல்கள் இப்படி மார்க்கெட்டிங் தந்திரத்தில் ஈடுபடுகின்றன என்று கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications