பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.. கல்லூரி வளாகத்தில் சக மாணவரால் இளம்பெண் பலாத்காரம்
பெங்களூர்: பெங்களூரில் கல்லூரி வளாகத்தில் வைத்தே சக மாணவரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ரெஸ்ட் ரூமிற்குள் வலுக்கட்டாயமாக தள்ளி மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரின் தெற்கு பகுதியில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெஞ்சை உறையை வைக்கும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கல்லூரி மாணவர் கைது
கல்லூரி மாணவி ஒருவரை அவருடன் படித்த 21 வயது மாணவன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பெங்களூரில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:
பெங்களூர் தெற்கு பகுதியில் உள்ள கல்லூரியில் 6-வது செமஸ்டர் படித்து வரும் மாணவர் ஜீவன் கவுடா. இவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடன் பயின்று வந்த மாணவியிடம் இருந்து சில பொருட்களை கேட்டுள்ளார். இதற்காக ஏழாவது மாடியில் உள்ள ஆர்கிடெக் பிளாக்கிற்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர்.
ரெஸ்ட் ரூமிற்குள் தள்ளி
தற்போது மாணவி 7 வது செமஸ்டர் படித்து வந்தாலும் ஏற்கனவே அறிமுகம் ஆன நண்பர் என்பதால் நம்பி சென்றுள்ளார். மாணவியை பார்த்ததும் தனது கொடூர முகத்தை காட்டிய இளைஞர், வலுக்கட்டாயமாக கூப்பிட்டு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன மாணவி லிப்டில் ஏறி தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் படிக்கட்டு வழியாக வந்து 6-வது புளோரில் மாணவியை வழிமறித்த அந்த கொடூரன், அருகே இருந்த ஆண்கள் ரெஸ்ட் ரூமிற்குள் வலுக்கட்டாயமாக தள்ளி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க தயங்கிய மாணவி, மனதிற்குள்ளேயே போட்டு வெதும்பி கொண்டு இருந்துள்ளார். பெற்றோரிடம் தனக்கு நேந்த கொடுரத்தை எடுத்துக் கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று முன் தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தபப்ட்ட மாணவர் ஹனுமந்தநகர் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவல் நிலையத்தில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடி காட்சிகள் இல்லை என்பதால், ஆதாரங்களை திரட்டுவதில் சிக்கல்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்கிரசை விமர்சிக்கும் பாஜக
இருப்பினும், தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இளம்பெண் கல்லூரி வளாகத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பாஜக), மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. வெறும் நான்கு மாதங்களில் 979 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 114 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன
மகளிர் ஆணையத்திற்கு கடிதம்
"அரசின் குற்றவியல் செயலற்ற தன்மையால் நமது பெண்களும் குழந்தைகளும் பயத்தில் வாழ்கின்றனர். மைசூரில் ஒரு பழங்குடிப் பெண்ணின் கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முதல் கலபுரகியில் ஒரு நூலகரின் சோகமான தற்கொலை வரை - இது ஒரு தார்மீக மற்றும் நிர்வாக தோல்வி," என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவுக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பக் கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு (NCW) அவசரக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தனியார் பொறியியல் கல்லூரி தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications