பெங்களூர் வளர்ச்சிக்கு ரூ.7,795 கோடி.. வருகிறது புறநகர் ரயில் திட்டம்! பட்ஜெட்டில் எடியூரப்பா அதிரடி
பெங்களூர்: பெங்களூரு நகரத்தின் விரிவான வளர்ச்சிக்காக 2021-22ம் ஆண்டு மாநில பட்ஜெட்டில், முதல்வர் எடியூரப்பா ரூ .7,795 கோடியை ஒதுக்கியுள்ளார். இதில், பல சிவில் திட்டங்கள், பெருநகர் பெங்களூர் மகாநகர பாலிகே நடத்தும் பெங்களூரு பள்ளிகளின் மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கும்.
கர்நாடக அரசின் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் முதல்வர் எடியூரப்பாவால் இன்று, தாக்கல் செய்யப்பட்டது.
இதில், புறநகர் ரயில் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டில் ரூ.850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை போல, பெங்களூரில் புறநகர் ரயில் சேவைகள் இல்லை. எனவே இந்த ரயில் சேவைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் பாதை
ரூ .813 கோடி செலவில் யஷ்வந்த்பூர்-சன்னசந்திரா மற்றும் பொம்மனஹள்ளி-ஓசூர் ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் திட்டம், 2023 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள மைசூரு லாம்ப்ஸ் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் எக்ஸ்பீரியன்ஸ் பெங்களூர் மையம் மேம்படுத்தப்படும். பைப்பனஹள்ளியில் அமைந்துள்ள என்ஜிஇஎஃப் மற்றும் பிற மூன்று இடங்களில் ட்ரீ பூங்காக்கள் மேம்பாடு செய்யப்படும்.

சுற்றுலா தலம்
கோரமங்களா பள்ளத்தாக்கை (valley) சுற்றுலா தலமாக உருவாக்க ரூ .169 கோடி செலவில் கே -100 திட்டத்தை செயல்படுத்துதல். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Bengaluru Signature Business Park மேம்படுத்தப்படும்.

குடிநீர் வழங்கல் திட்டம்
பெங்களூர் குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் பிபிஎம்பியுடன் இணைந்து ரூ .450 கோடி செலவில் கோரமங்களா பள்ளத்தாக்கின் 248 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை.

வெளிவட்டச் சாலை
பெங்களூரில் ரூ .14,788 கோடி மதிப்பீட்டில் 58.2 கி.மீ நீளமுள்ள வெளி வட்டச் சாலை, விமான நிலைய மெட்ரோ நெட்வொர்க் 2 ஏ மற்றும் 2 பி ஆகியவற்றை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரூ .1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏரிகள் மேம்பாடு
பெங்களூரிலுள்ள 234 ஏரிகளை நிரப்ப ரூ.500 கோடியில், திட்டம் வகுக்கப்படும். இதனால், பெங்களூர் ஊரகம், தும்கூர், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் ரிஷபாவதி பள்ளத்தாக்கிலிருந்து, 308 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications