மனைவியை பயமுறுத்த நினைச்சாராம்.. அதுக்கு இப்படியா? வீட்டு ஹாலிலேயே கணவன் செய்த வேலை.. பரபர பெங்களூர்
பெங்களூர்: மனைவியை பயமுறுத்த நினைத்தாராம்.. அதுக்குள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது பெங்களூருவில்..!!
பீகார் மாநிலம் தாசரஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் அமித்குமார்.. 28 வயதாகிறது.. இவர் பெங்களூருவில் ஜிம் டிரெயினராக வேலை பார்த்து வருகிறார்.. அதனால், பெங்களூரிலேயே வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.

காதல்: தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணை அமித்குமார் விரும்பியிருக்கிறார்.. அந்த பெண்ணும், அமித்குமாரை காதலித்துள்ளார்.. இந்த காதல் விவகாரம், இருவரது வீட்டுக்கும் தெரியவந்ததையடுத்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனாலும், அனைவரது எதிர்ப்பையும் மீறி அந்த பெண்ணை அமித்குமார் கல்யாணம் செய்து கொண்டார்.. ஆசை ஆசையாக அமித்குமாரை கல்யாணம் செய்த அந்த பெண், நர்சிங் படித்து வந்தார்.. பிறகு, பெங்களூருவிலேயே உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் வேலையும் கிடைத்தது.
சந்தேகம்: வேலைக்கு போனபிறகு, மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, மருத்துவமனையில் சக நர்ஸ்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால், நிறைய தோழிகள் இந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கிறார்கள். அதனால், டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தும்கூட தோழிகளுடன் நிறைய நேரம் போனில் பேசி, அரட்டை அடித்து வந்திருக்கிறார்.. இது அமித்குமாருக்கு எரிச்சலை தந்துள்ளது.. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறும், வாக்குவாதமும் முற்றி வந்துள்ளது..
ஒருகட்டத்தில் வெறுப்படைந்த அந்த பெண், அமித்குமாரை விட்டு தனியாக, வீடு எடுத்து வசித்து வருகிறார். இதனால், மனமுடைந்த அமித்குமார், மனைவியை சமாதானம் செய்ய பலமுறை முயற்சித்தார்.. ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று பலமுறை கூப்பிட்டார்.. ஆனால், இப்படி ஒரு சந்தேகப்பிராணியுடன் சேர்ந்து வாழவே முடியாது என்று மனைவி உறுதியாக சொல்லிவிட்டாராம்.. எனவே, நேற்றுமாலையும், மனைவிக்கு சமாதானம் பேசியிருக்கிறார் அமித்குமார்.
மிரட்டல்: வீடியோ கால் செய்து, "நீ வீட்டுக்கு வராவிட்டால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டியிருக்கிறார்.. இதற்காகவே, ஹாலில் கயிற்றை கட்டி, அதில் கழுத்தை மாட்டியிருந்தார் அமித்குமார்.. கழுத்தில் கயிறுடன், வீடியோகாலில் பேசிக்கொண்டேயிருந்தபோது, திடீரென அவரது கையிலிருந்து செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது.. அந்த செல்போனை பிடிக்க முயன்றபோது, அமித்குமாரின் கழுத்து தூக்குக்கயிற்றில் இறுக்கமாக மாட்டிக்கொண்டது. இதில் கழுத்து எலும்புகள் நெறிபட்டு, அமித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரிதாபம்: இதையடுத்து, பகல்குண்டே போலீஸார், விரைந்து சென்று அமித்குமாரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. மனைவியை பயமுறுத்த கயிறு எடுத்து, அதே கயிற்றில் பரிதாபமாக தொங்கிவிட்டார் இளம் ஜிம் டிரெயினர்.












Click it and Unblock the Notifications