கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள்.. பரிசோதனையில் அம்பலம்.. பெங்களூரின் தாராவி, ஹொங்கச்சந்திரா நிலை இது
பெங்களூர்: பெங்களூரின் தாராவி போல மாறிவிட்டது ஹொங்கசந்திரா ஏரியா. கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த பெங்களூரில் இந்த பகுதி மட்டும் ஒரு கிளஸ்டராக மாறிவிட்டது.
பீகாரை சேர்ந்த 54 வயது தொழிலாளிக்கு முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஏழைகள் வாழும் பகுதி என்பதால், நெருக்கமாக பல வீடுகள் இருக்கின்றன. எனவே, நோயாளி பலருடன் தினசரி தொடர்பில் இருந்துள்ளார். அதை கண்டுபிடிப்பதுதான் இப்போது பெருநகர் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட ஏரியா சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நோயாளி 15 நாட்களுக்கும் மேலாக சுதந்திரமாக அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். எனவே, ஏற்கனவே வைரஸ் வேறு பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தெற்கு பெங்களூர் பகுதியில், கொரோனா வைரசை பரப்பும் முக்கிய பகுதியாக ஹொங்கச்சந்திரா மாறியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
நோயாளியின் 23 முதன்மை தொடர்புகளை நேற்று முன்தினம், அதிகாரிகள் கண்டறிந்தனர். நேற்று, இந்த எண்ணிக்கை 153 என்ற அளவுக்கு அதிகரித்தது. 30 இரண்டாம் நிலை தொடர்புகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன.
இந்த சோதனைகள் முடிவில் இதுவரை 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற தொடர்புகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அல்லது பாதிப்பு ஏற்படாமலும் போகலாம். எனவே அவர்கள் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video
பீகார் தொழிலாளி வசித்த வீட்டின் மிக நெருக்கத்தில் சுமார் 200 பேர் வசிக்கிறார்கள். பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள். இதுதவிர கணிசமான தமிழர்களும் இங்கே வசிக்கிறார்கள். ஏரியா சீல் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications