பெங்களூரில் இப்படியொரு பெண்.. "ஹவுஸ் ஓனர்" மீது விழுந்த பார்வை.. பின்னாலயே நைசாக வந்து.. இது தேவையா?
பெங்களூரு: பெங்களூருவில் படித்த இளம்பெண் ஒருவர் செய்த காரியத்தை பார்த்து, அதிர்ந்து போயிருக்கிறார்கள் பொதுமக்கள்
பெங்களூருவில் நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தபடியே வருகிறது.. குறிப்பாக, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன..

குருமூர்த்தி: அப்படித்தான் கடந்த வாரமும் பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்தது.. கெங்கேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கோணசந்திராவை சேர்ந்தவர் குருமூர்த்தி... இவரது மனைவி பெயர் திவ்யா.. 36 வயதாகிறது.. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.. இவர்களுடன் குருமூர்த்தியின் அம்மாவும் அதே வீட்டில் வசித்து வருகிறார்.
ஒரு சலூன் கடையில் குருமூர்த்தி வேலை பார்த்து வருகிறார்... சம்பவத்தன்று குருமூர்த்தி சலூன் கடைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.. பிறகு வேலை முடிந்து, குருமூர்த்தி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, திவ்யா இறந்து கிடந்தார்... அவரது கழுத்திலிருந்த நகைகளும் காணாமல் போய் இருந்தது.
கெங்கேரி: இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி உடனடியாக கெங்கேரி போலீசுக்கு சென்று தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, திவ்யா உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்த விசாரணையையும் துவங்கினர். தங்க நகைக்காக திவ்யா கொலை செய்யப்பட்டிருப்பாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமானதுடன், கொலையாளியையும் போலீசார் தேடி வந்தனர்.
ஆனால், கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால், இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீஸ் களமிறக்கப்பட்டது.. அப்போதுதான், திவ்யா வீட்டில் வாடகைககு குடியிருக்கும் மோனிகா மீது சந்தேகம் திரும்பியது.. மோனிகாவுக்கு 24 வயதாகிறது.. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. பெங்களூரில் ஒரு நிறுவனத்தில், ஒரு வருடமாக டேட்டா என்ட்ரி வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், திவ்யா வீட்டிற்கு வாடகைக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறதாம்.
மோனிகா: மோனிகா இங்கு குடிவந்ததுமே, அவரது வீட்டிற்கு ஒரு இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.. அவரை தன்னுடைய கணவர் என்று மோனிகா சொன்னாராம்.. ஆனால், அவர் மோனிகாவின் காதலனாக இருக்கலாம் என்கிறார்கள்.
அந்த காதலனுக்கு டாடா ஏஸ் வாகனம் வாங்கி தர வேண்டும் என்பது மோனிகாவின் ஆசையாம்.. இதற்காக பணத்தையும் சேர்த்து வைத்து வந்திருக்கிறார்.. அப்போது தான், திவ்யாவின் கழுத்தில் கிடந்த தங்கத்தாலியைதான் மோனிகா குறி வைத்திருக்கிறார். அந்த சங்கிலியை பறிக்கும் நாளுக்காக மோனிகா காத்திருந்தார்.
மாமியார்: சம்பவத்தன்று காலையில், குருமூர்த்தி சலூன் கடைக்கு போய்விட்டார்.. மாமியாரும் காலையிலேயே வேலைக்கு கிளம்பி சென்று விடுவார்... திவ்யா தன்னுடைய 2 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். இதுதான் சமயம் என்று தீர்மானித்த மோனிகா, நைசாக பின்னாலிருந்து வந்து, திவ்யாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் திவ்யா துடிதுடித்து அங்கேயே விழுந்து இறந்துவிட்டார்..
பின்னர் திவ்யா கழுத்தில் கிடந்த நகையை பறித்துக்கொண்ட மோனிகா, அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டதுடன், அதற்கு பிறகு எதுவுமே நடக்காதது போலவும் அதே வீட்டில் இருந்துள்ளார்.. இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, கெங்கேரி போலீஸார் மோனிகாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்..
தொடர்ந்து பெங்களூரில் நகைக்காக பெண்கள் மீது வன்முறைகள் அதிகரித்து வரும்நிலையில், இந்த ஹவுஸ் ஓனர் திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவமும் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
அதிர்ச்சி: திவ்யா கழுத்தில் கிடந்தது 36 கிராம் தங்கச்சங்கிலியாம்.. இப்படி 2 லட்சம் மதிப்புள்ள நகையை வீட்டிற்குள் திவ்யா அணிந்துள்ளதே, மோனிகாவின் கண்ணை உறுத்தியதாக தெரிகிறது. ஆனாலும், மெத்த படித்த பெண், அதுவும் 24 வயதேயான இளம்பெண், இப்போதே ஜெயிலுக்கு போயுள்ளது அதிர்ச்சியாகவே உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications