அலறவிட்ட பெங்களூர்.. கோழி அறுப்பது போல.. யாரிந்த பெண்? சொல்லியும் கேக்கலயே.. ஐயோ கோழிக்கடை மஞ்சுநாத்
பெங்களூர்: ஆணவ கொலையால் அதிர்ந்து போயுள்ளது கர்நாடக மாநிலம்.. பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் இந்த அக்கிரமத்தை செய்துள்ளார் தந்தை.
நாளுக்கு நாள் ஆணவ கொலைகள் தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களிலும் பெருகி வருகிறது.. கடந்த மாதம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் 2 ஆணவ கொலைகள் அரங்கேறி, பலரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அம்மாநில முதல்வர் வரை விவகாரம் சென்றது.

பழக்கவழக்கங்கள்: ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே இத்தகைய குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்திருந்தார்.
இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது..பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்.. 45 வயதாகிறது.. கோழிக்கடை வைத்திருக்கிறார்.. இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகள் பெயர் கவனா.. 20 வயதாகிறது.. இரண்டாவது பெண்ணுக்கு 17 வயதாகிறது..
காதலன்: இந்த 17 வயது பெண், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்திருக்கிறார்.. விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், மகளை மஞ்சுநாத் கண்டித்துள்ளார்.. இதனால், கடந்த 10ம் தேதி, வீட்டை விட்டு, வெளியேறிய பெண், தன்னுடைய காதலனை அழைத்துக் கொண்டு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்...

ஆனால், பெண்ணுக்கு 17 வயது மட்டுமே ஆவதாலும், பாதுகாப்பு கருதியும், காப்பகத்திற்கு அந்த பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மூத்த மகள் கவனா, தானும் இன்னொரு இளைஞரை காதலிப்பதாகவும், அவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லி, மஞ்சுநாத் தலையில் இன்னொரு இடியை தூக்கி போட்டார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சியில் உறைந்துபோனார்..
வாக்குவாதம்: தயவுசெய்து காதலை கைவிடுமாறு மகளிடம் கெஞ்சினார்.. கண்டித்தார்... வாக்குவாதம் செய்தார்.. ஆனால், எக்காரணம் கொண்டும் காதலை கைவிட மாட்டேன் என்று திடமாக சொல்லிவிட்டார் கவனா. இந்த வாக்குவாதம் தந்தைக்கும் மகளுக்கும் முற்றிக்கொண்டே போனது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், இரும்பு கம்பியை எடுத்து வந்து, மகளின் தலையில் தாக்கியதில், உயிரிழந்தார் கவனா.. இதைப்பார்த்த மஞ்சுநாத், நேராக, விஸ்வநாதபுரம் போலீசுக்கு சென்று சரணடைந்துவிட்டார்..
மகளை கொன்றதாகவும் வாக்குமூலம் தந்தார். பிறகு போலீசார் வீட்டிற்கு சென்று, கிடந்த கவனாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. மஞ்சுநாத்திடம் இப்போது விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

கொடூரம்: முன்னதாக, மகளை இரும்புக்கம்பியால் அடித்ததுமே, சம்பவ இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்துள்ளார் கவனா.. மகள் மயக்கத்தில் இருக்கும்போதே, கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, கவனாவின் கழுத்தை அறுத்துவிட்டாராம் மஞ்சுநாத். அதற்கு பிறகு, கை , கால்களில் பலமுறை வெறி தீர கத்தியால் குத்தியுள்ளார்..கண்ணெதிரிலேயே மகள், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை பார்த்தபிறகுதான், போலீஸிடம் சரணடைந்தாராம் மஞ்சுநாத்..!!
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்தாலும்கூட, ஆணவ கொலைகளின் எண்ணிக்கைகள் குறைவதில்லை.. கல்வி ஒன்றே அனைத்தையும் மாற்றும் என்று நம்பிகொண்டிருந்தால், அப்படியும் இந்த கொலைகள் குறையவில்லை..
ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள், நம்முடைய நாட்டில் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ஆணவ கொலைக்கு நிரந்தமான, விடையும், விடிவும் தான் என்ன???
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications