விடாத கர்நாடகா.. விநாயகர் சதுர்த்தி பந்தல்களில் சாவர்க்கர் படம்.. பெங்களூரில் கிளம்பும் சர்ச்சை
பெங்களூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூர் மாநகரில் விநாயகர் பந்தல்களில் சாவர்க்கர் படம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் மாநகர விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது.
சாவர்க்கர்... இந்தியாவில் தற்போது விவாதங்களில் உள்ள ஒரு பெயர். இந்திய விடுதலை போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய விவாத பொருளாக இருந்து வருகிறது. சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கோரிய நபர். வரலாற்றை திரித்து கூறி விருது வழங்குவது என்பது மிகவும் தவறானது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடகா பாடப்புத்தகம் சர்ச்சை
இதனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சாவர்க்கர் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து வருகிறது. மேலும் பாஜகவினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாவர்க்கர் பற்றிய பாடங்கள் பள்ளி புத்தகங்களில் இடம்பெற செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடு வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகத்தில் 8 ம் வகுப்பு பாடத்தில் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து புல்புல் பறவை மூலம் பறந்து வந்து நாட்டை பார்த்து சென்றதாக வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இதனை தற்போது மீண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், அந்த வாக்கியத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

சாவர்க்கர் படத்துடன் விநாயகர் சதுர்த்தி
இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் தான் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை சாவர்க்கர் படத்துடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஐடி தலைநகரான பெங்களூரும் விதிவிலக்கல்ல. இங்கும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பெங்களூர் நகரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
இதன் ஒருபகுதியாக பெங்களூர் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பான பெங்களூரு மாநகர கணேசஉற்சவ் சமீதி சார்பில் பெங்களூர் மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத்திடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் விநாயகர் சதுர்த்தி பண்டிக்கைக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், தெருவிளக்கு பற்றாக்குறையை சரிசெய்யவும் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். விநாயகர் சிலை கரைக்க வசதியாக ஹெப்பால், சங்கி, அல்சூர், எடியூர் உள்ளிட்ட ஏரிகளில் கிரேன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சாவர்க்கர் படம் வைக்க திட்டம்
இதுற்றி அந்த சமீதியின் உறுப்பினர் பிரகாஷ் ராஜூ கூறுகையில், ‛‛ பெங்களூரில் செப்டம்பர் 2, 3, 4, 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் அனைத்து பந்தல்களிலும் சாவர்க்கரின் உருவப்படங்களை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் பிற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்களும் இடம்பெற செய்யப்பட உள்ளது'' என கூறியுள்ளார்.

பேனரில் சாவர்க்கர் படம்
முன்னதாக கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையான நிலையில் அம்மாநில எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தாராமையா கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரது கார் மீது முட்டை வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது பந்தல்களில் சாவர்க்கர் படம் வைக்க அனுமதி கோரி பெங்களூர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications