மனைவி கிட்ட இருந்து காப்பாற்றுங்கள்.. பிரதமருக்கே நேரடியாக புகார் அளித்த பெங்களூர் "கணவர்".. கடவுளே!
பெங்களூர்: தனது மனைவி தன்னை தினந்தோறும் அடித்து சித்ரவதை செய்வதாகவும், கத்தியால் உடலில் வெட்டுவதாகவும் கூறி பெங்களூரைச் சேர்ந்த நபர் நேரடியாக பிரதமர் அலுவலகத்துக்கே புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனது கைகளில் ரத்தம் வழியும் புகைப்படத்தையும் அந்த நபர் பதிவிட்டிருப்பதால் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகுமாறு பெங்களூர் காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படமும், புகாரும் வைரல் ஆகியுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொடுமைப்படுத்தப்படும் ஆண்கள்..
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதே சமயத்தில், பெண்களுக்கு ஏற்படும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் குறைவான எண்ணிக்கையில் இவை நடைபெறுவதாலும், வெளியே கூறினால் தனக்கு அவமானமாகிவிடுமே என்ற எண்ணத்தில் சில ஆண்கள் இதை மறைத்து வைப்பதுமே இதுபோன்ற சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமல் போகின்றன. மேலும், பெண்களுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லாமல் இருப்பதும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவராததற்கு காரணமாக கூறப்படுகிறது. அப்படியொரு சம்பவம்தான் பெங்களூரில் நடந்துள்ளது.

தினம் தினம் சித்ரவதை
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குக்கு ஒரு புகார் வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த யதுநந்தன் ஆச்சர்யா என்ற பெயரில் அந்த புகார் வந்திருக்கிறது. அதில், "எனது மனைவி தினம் தினம் என்னை சித்ரவதை செய்கிறார்; அடிக்கிறார்; கத்தியால் வெட்டுகிறார். இதுதான் நீங்கள் கூறும் பெண் சக்தியா? இதைதான் நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா?

ரத்தம் வழியும் புகைப்படம்
நான் அனுபவிக்கும் சித்ரவதைக்காக எனது மனைவி மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? எடுக்கப்படாது. யாராவது எனக்கு உதவுவார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் நான் ஒரு ஆண். அதனால் யாரும் எனக்கு யாரும் உதவ மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தந் கையில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் வழியும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

காவல்துறை அறிவுறுத்தல்
பிரதமர் அலுவலகத்துக்கு மட்டுமல்லாமல் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பெங்களூர் காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் தனது ட்வீட்டை யது நந்தன் 'டேக்' செய்துள்ளார். இந்த புகாரும், புகைப்படமும் வைரல் ஆனதை அடுத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூர் காவல்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பெங்களூர் காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்குமாறு யது நந்தனுக்கு பதிலளித்துள்ளார். மேலும், அவரது முகவரியை பதிவிடுமாறும், சட்ட ரிதீயான நடவடிக்கையை போலீஸார் எடுப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications