தாலி ஈரமும் காயல.. அவசர அவசரமா கல்யாணம்.. அதே வேகத்தில் பரலோகம்.. கோலாரை கலங்கடித்த ஜோடி.. காரணம்?
பெங்களூர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மணப்பெண் உயிரிழந்த நிலையில், மணமகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. கர்நாடகாவில் நடந்த இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சம்பரசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவீன்.. 24 வயதாகிறது.. இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பைனாபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயது லிகிதா ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

காதல் ஜோடி: இந்நிலையில், தங்களது குடும்பத்தினரிடம் பேசி, இரு தரப்பிலிருந்தும் ஒப்புதலை பெற்று திருமணம் செய்ய முடிவானது.. இந்த ஜோடிக்கு நேற்று முன்தினம் காலை வெகுசிறப்பாக திருமணமும் நடந்தது.
காலையில் திருமணம் முடிந்ததுமே, மாலை 5 மணியளவில் இந்த தம்பதி, தனியறையில் இருந்துள்ளனர். அதாவது, மதிய உணவிற்கு பிறகு, தாய் மாமா வீட்டிற்கு அழைத்து சென்றார்களாம்.. அங்கு மணமக்களுக்கு கூல் டிரிங்க்ஸ், டிபன் தந்துள்ளார்கள்.. அவைகளை சாப்பிட்டுவிட்டு, ரூமில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தபோதுதான், திடீரென நவீன் அந்த ரூம் கதவை திடீரென உள்ளிருந்தே சாத்தினாராம்.. அடுத்த சில நிமிடங்களிலேயே அறையிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அதிர்ச்சி: இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை என்பதால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.. அப்போது புதுமண தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு கதறினார்கள்..
மணப்பெண் தலை, கழுத்து, கை, கால், முதுகு ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டும், மணமகன் தலை, கை, தோள்பட்டை பகுதியில் கத்தி வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
தீவிர சிகிச்சை: இருவரையும் ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதில், மணமகள் லகிதாஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து, நவீன் நிலைமை சீரியஸாக இருந்ததால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்..
இதனிடையே, மாவட்ட எஸ்.பி., சாந்தராஜு நேரடியாகவே வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டார். இதில், முதலில் கொடூரமாக தாக்கப்பட்டது மணமகள் லிகிதா என்றும், லிகிதாவை தாக்கிய பிறகே, நவீன் தன்னைத்தானே தாக்கிக்கொண்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. நவீனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்பதால், அவருக்கு சிகிச்சை முடிந்து நினைவு திரும்பிய பிறகே, சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
பரிதாபம்: ஆனால் சிகிச்சை பலனின்றி மணமகனும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. 2:00 மணிக்கு நவீனும் உயிரிழந்துள்ளார்.. எனினும், தம்பதிக்குள் என்ன தகராறு என்றும் தெரியவில்லை. ஆனால், 2 குடும்பத்திலும் எந்தவிதமான தகராறும், மனஸ்தாபமும் இல்லை என்கிறார்கள்.
நவீனின் சகோதரி மோனிகா, கர்நாடகாவின் தங்கவயல் கெம்பாபுரா அருகே, சம்பரசன ஹள்ளியில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக சம்பரசன ஹள்ளிக்கு நவீன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போதுதான், 6 மாதத்திற்கு முன்பு லிகிதாஸ்ரீயை சந்தித்துள்ளார்.. பார்த்ததுமே காதல் மலர்ந்துள்ளது. இதுகுறித்து வீட்டில் பேசி திருமணத்துக்கும் சம்மதம் வாங்கிவிட்டா.
பரஸ்பரம்: இதன்பின்பு, காதலர்கள் நவீன் -- லிகிதாஸ்ரீ இருவரும் செல்போனில் பரஸ்பரம் பேசி வந்திருக்கிறார்கள்.. ஆனால் முதலில் கல்யாண பேச்சை நவீன்தான எடுத்துள்ளார்..
நவீன் வலியுறுத்தி கேட்டு கொண்டதால்தான், இந்த கல்யாணத்தை அவசர அவசரமாக குடும்பத்தினர் தேதி குறித்துள்ளனர்.. கடந்த 7ம் தேதி காலை 7:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.. அன்றைய முதல் நாள் இரவு தான் தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்களாம்.
திருமணம் முடிந்ததும், அன்று மாலை அருகிலிருந்த உறவினர் வீட்டில் மணமக்கள் இருவரும் தனியறையில் இருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.. இருவருமே வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அருகில் அரிவாள், உருட்டுக்கட்டை ரத்தக்கறையுடன் இருந்திருக்கிறது..
மஞ்சள் தாலி: இதில், லிகிதாவை கத்தியால் குத்திவிட்டு, அதற்கு பிறகு, தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு நவீன் முயன்றதாக கூறுகிறார்கள். எனினும், திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், மஞ்சள் தாலியின் ஈரம் கூட காய்வதற்கு முன்பே 2 மரணம் விழுந்துள்ளது கோலாரை நடுங்க வைத்து வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications