திமுக புகாரால் அதிரடி.. தமிழகம் பற்றிய சர்ச்சை பேச்சால் மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!
பெங்களூர்: தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூர் ஓட்டலில் குண்டு வைப்பதாக பாஜகவின் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து திமுக அளித்த புகாரில் ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் பெங்களூர் போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் உடுப்பி - சிக்கமகளூர் எம்பியாக இருப்பவர் ஷோபா கரந்தலாஜே. இவர் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையமைச்சராக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் தொகுதி மாறி பெங்களூர் வடக்கில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது. தமிழகம் பற்றி அவர் பேசிய கருத்து என்பது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

அதாவது ஷோபா கரந்தலாஜே, ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை''எனக்கூறினார்.
கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதுபற்றி என்ஐஏ விசாரிக்கும் நிலையில் ஷோபா கரந்தலாஜே இப்படி கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
மேலும் திமுக அமைப்பு ஆர்எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும், அதுபற்றி 48 மணிநேரத்தில் தகவல் அளிக்கவும் கர்நாடாக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தான் ஷோபா கரந்தலாஜே மீது பெங்களூர் காட்டன்பேட்டை போலீசார் வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பிரிவு 123(3ஏ) - மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையில் இருபிரிவினர் இடையே பகையை உருவாக்க முயற்சித்தல், சட்டப்பிரிவு 123 (3) - வேட்பாளர் மொழி, இனம், சாதி சமூகம் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தடை செய்தல் உள்ளிட்ட மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications