தினமும் இரவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்
பெங்களூர்: தினமும் மாலையில் பெய்து வரும் கன மழையால் பெங்களூரின் தாழ்வார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
பெங்களூரில் கடந்த நான்கு நாட்களாக தினமும் மாலையில் இருந்து இரவு வரை கன மழை கொட்டித்தீர்க்கிறது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது சிறுமி இறந்த சம்பவம் பெங்களூரின் பன்னேருகட்டா சாலை, பிலேஹள்ளி பகுதியில் நடந்தது.
இந்நிலையில், நேற்றும் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை கொட்டியது. இரவு 11.30 மணி வரையில் 42.3 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள் மழையில் சிக்கிக்கொண்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் நெரிசல் கட்டுக்குள் அடங்காமல் சென்றது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு ஓடிய மழை நீரில் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்பட்டனர்.
ஆஸ்டின் டவுன், மாகடி ரோடு, சுங்கதகட்டே, பாதராயனபுரா, பசவனகுடி என்.ஆர்.காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்றதால் இரவு முழுவதும் அவர்கள் தூக்கமின்றி விழித்திருந்து தண்ணீரை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அல்சூரில் வீடு இடிந்து இருவர் பலியாகினர்.
இன்று பகலில் பெங்களூரில் வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்ய கூடும். ஹுட்ஹுட் புயல் காரணமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு பெங்களூரில் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications