வாடகை வீட்டில்.. ஆட்டோ டிரைவர் செய்த அட்டகாசம்.. புத்தி பேதலித்து தடுமாறி போன பெங்களூர் ஹவுஸ் ஓனர்
பெங்களூர்: வாடகைக்கு குடிவந்த ஆட்டோக்காரர் செய்த டார்ச்சரால், போலீசில் புகார் தந்துள்ளார் பெண் ஒருவர்.. இது குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது பெங்களூருவில்?
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 37 வயதாகிறது.. திருமணமாகி, கணவர், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. தனக்கு ஒரு போர்ஷனை ஒதுக்கிவிட்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வகையில், ஒருவர் வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார்.. தன்னுடைய பெயர் சுரேஷ் என்றும், ஆட்டோ டிரைவராக இருப்பதாக சொல்லி வீடு கேட்டுள்ளார். இதையடுத்து, சுரேஷுக்கு வீட்டினை வாடகைக்கு தந்தார்.
வாடகை வீடு: நாளடைவில் அந்த பெண்ணுக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இறுதியில் கள்ளக்காதலில் வந்து முடிந்தது.. இருவரும் பல நாட்கள் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது..
இந்நிலையில், இவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.. ஒருகட்டத்தில் தகராறும், சண்டையும் வெடித்தது.. சம்பவத்தன்றும் கள்ள ஜோடிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த சுரேஷ், அந்த பெண்ணின் ஆபாச போட்டோக்கள், வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார்..
மிரட்டல்: இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், சுரேஷ் மிரட்டியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், சுரேஷ், தான் சொன்னபடியே, பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது..
சுரேஷை பற்றி விசாரித்தபோதுதான், அவர் சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய ரவுடி என்பதும், ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, தற்போதுகூட, கொலை முயற்சி வழக்கில் துமகூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சுரேஷ் குறித்து பேடரஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரவுடி சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications