பெங்களூரு வாடகை வீட்டில் உறைந்த ரத்தம்! இன்ஸ்டாகிராம் தொடங்கி கொலையில் முடிந்த 20 வயது பெண்ணின் உறவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில், இன்ஸ்டாகிராம் தளம் மூலம் உருவான காதல் உறவு, ஆறு மாத கால லிவ்-இன் வாழ்க்கைக்குப் பிறகு மிகக் கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கர்நாடகா மாநில போலீசார் இது தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்தி வருகிறார்கள்.. ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கதறல் இன்னமும் அடங்கவில்லை.. அப்படி என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் அனுஷா.. 20 வயதாகிறது.. இவர் சோஷியல் மீடியாவில் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.. அப்போதுதான் 27 வயதான ஷரத் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

Bangalore Rental House

பெங்களூரு அனுஷா

தண்ணீர் டேங்கர் டிரைவராக உள்ளாராம் ஷரத்.. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளனர். ஆரம்பத்தில் சாதாரண நட்பாகத் தொடங்கிய இவர்களின் உரையாடல், நாளடைவில் தீவிர காதலாக உருவெடுத்துள்ளது. காதலின் ஆழம் காரணமாக, 2 பேருமே தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

அதன்படியே பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழத் தொடங்கினர். கடந்த 6 மாதங்களாக திருமணம் செய்யாமல் அதாவது கீழ் லிவ்-இன் உறவில் வாழ்ந்து இந்த ஜோடி ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளது.. ஆனால் ஆரம்ப நாட்களைப் போல மகிழ்ச்சி நீடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்பப் பிரச்சனைகள் தொடர்பாக 2 பேருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதங்களும், கடுமையான சண்டைகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

லிவ் இன் உறவு - ஜோடி

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவும், இவர்களது வீட்டில் மீண்டும் தகராறு வெடித்துள்ளது.. பிறகு அன்றைய இரவே 2 பேரும் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடித்தார்களாம்.. மதுவின் போதையில் உச்சக்கட்டமாக மண்டைக்கு ஏறியிருக்கிறது. இதனால் மறுபடியும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் மெல்ல ஆரம்பித்துள்ளது.. இது கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கட்டுப்பாட்டை மீறி கடுமையான கைகலப்பாக மாறியிருக்கிறது.

சண்டையின் உச்சகட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த ஷரத், அனுஷாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறிய அனுஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.. கண் இமைக்கும் நேரத்தில் இந்த மரணம் நடந்துள்ளது..

பெங்களூரு கொலையில் முடிந்த உறவு

போதை தெளிந்ததுமே அனுஷாவின் சடலத்தை கண்டு, நிலை குலைந்து போன ஷரத், பதற்றமடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். பிறகு, சட்டப்பூர்வமாக இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்து, ஒரு வக்கீலை சந்தித்து நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார்.

ஆனால் வழக்கறிஞர் உடனே சேஷாத்ரிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தந்துவிட்டார்.. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு சடலமாகக் கிடந்த அனுஷாவின் உடலைக் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு தலைமறைவாக முயன்ற ஷரத் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மற்ற உண்மைகளை கண்டறிய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. ஆனால், விஷயத்தை கேள்விப்பட்ட அனுஷாவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போய் விட்டார்களாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+