10 உடல்களை பார்த்தேன்.. குழந்தைகளும் இறந்துட்டாங்க.. கண்ணீர் விட்டு அழுத டிகே சிவக்குமார்
பெங்களூர்: ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் குழந்தைகளும் இறந்துட்டாங்க.. 10 பேரின் உடல்களை பார்த்தேன் என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கண்ணீர் விட்டு அழுதார்.
ஐபிஎல் 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதுதான் ஆர்சிபியின் முதல் ஐபிஎல் கோப்பையாகும். கடந்த 17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி இந்த முறை முதன் முறையாக சாதித்தது.

இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடக மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று மதியம் ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்தனர்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவில் பங்கேற்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். விதானசவுதா முதல் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர்.
அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி என்ற 28 வயது பெண் உள்பட மொத்தம் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் விழா எடுக்காத கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு இருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பெங்களூரில் இன்று துணை முதல்வர் டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛நான் குழந்தைகளை நினைத்து கவலைப்படுகிறேன். அவர்கள் எல்லாம் சின்ன குழந்தைகள். 15 வயது தான் இருக்கும். இறந்த 10 பேரின் உடலை நான் பார்த்தேன். எந்த குடும்பத்தாலும் இத்தகைய இழப்பை தாங்கி கொள்ள முடியாது'' என கூறி கண்கலங்கினார். மேலும் அவர் கூறுகையில், ‛‛ சம்பவம் நடந்தபோது போலீஸ் கமிஷனர் என்னிடம் 10 நிமிடத்தில் நிகழ்ச்சியை முடிக்க கூறினார். நான் நகிழ்ச்சிக்கு சென்றேன். அந்த சமயத்தில் 1 முதல் 2 பேர் இறந்ததாக தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்தோம்.
நானும், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாலும் கூட நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைய முடியவில்லை. கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை என் காரில் ஏற்றிக்கெண்டு சென்றேன். கர்நாடகா கிரிக்கெட் சங்க நிகழ்ச்சிக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் சங்கத்தின் தலைவர், செயலாளர் என் காரில் இருந்தனர். இதனால் எந்த அறிவிப்பையும் செய்ய முடியவில்லை. நிகழ்ச்சியை உடனடியாக முடிக்க கிரிக்கெட் சங்கமும் ஒத்துழைப்பு கொடுத்தது'' என்று கண் கலங்கினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications