"ஆர்சிபி அணிதான் எல்லாம் செய்தது!" கூட்ட நெரிசலுக்கு பெங்களூர் அணி மீது பழி போட்ட கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் வென்ற ஆர்சிபி அணி பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நேற்று ஈடுபட்டது. அப்போது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்த வெற்றி கொண்டாட்டத்தை தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அணி நிர்வாகமே ஏற்பாடு செய்ததாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதமாக நடந்த ஐபிஎல் தொடரில் செவ்வாய்க்கிழமையோடு முடிந்தது. இறுதி போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். இதனால் ஆர்சிபி அணிக்காக இப்போது விளையாடிய வீரர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் கூட எமோஷ்னல் ஆனார்கள்.

பெங்களூர் கிரிக்கெட்
இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் நேற்று பெங்களூர் முழுக்க பதற்றமான சூழல் ஏற்பட்டது. சாதாரண கிரிக்கெட் வெற்றியை அரசு எப்படிக் கொண்டாடலாம்.. அரசின் பொறுப்பற்ற செயலே இதற்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையே ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசு கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அணி நிர்வாகம் தான் ஏற்பாடு செய்ததாகவும் கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்தார். ஆர்சிபி தனது அணி வீரர்களை பெங்களூருக்கு அழைத்து வந்த போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்
அமைச்சர் பரமேஸ்வரா
இது தொடர்பாகக் கர்நாடக உள் துறை அமைச்சர் பரமேஸ்வரா மேலும் கூறுகையில், "கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் சித்தராமையா ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு யார் காரணம் என்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்சிபி கொண்டாட்டங்கள்
ஆர்சிபி அல்லது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திடம் கொண்டாட்டம் எதற்கும் நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை.. அவர்களே வெற்றி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அவர்கள்தான் அணியை பெங்களூருக்கு அழைத்து வந்தார்கள். வென்றது பெங்களூர் அணி என்பதால் கொண்டாட்டங்களுக்குத் தேவையான உதவி செய்ய நினைத்தோம். நாங்கள் அரசாக இந்த நிகழ்வில் பங்கேற்க மட்டுமே செய்தோம்.. இந்த சம்பவம் நடந்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
இறந்த உடல்களைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்... அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இப்படியொரு சம்பவம் நடக்கும் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.. குறைபாடுகள் எங்கு நடந்தன என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
11 பேர் உயிரிழப்பு
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெற்றி ஊர்வலம், அதிக கூட்டம் ஆகியவை தான் கூட்ட நெரிசலுக்குப் பிரதான காரணமாக இருந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.
நேற்று வெற்றி கொண்டாட்டத்திற்கு மைதானத்திற்குள் நுழைய பாஸ்கள் வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும் உரிய பாஸ்கள் இல்லாமலும் கூட பலரும் வளாகத்தில் நுழைய முயன்றுள்ளனர். இதுவும் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. பலரும் மைதானத்திற்குள் நுழையப் பெரிய சுவர்களில் ஏற முயன்றபோது காயமடைந்தனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications