அனுமதி இலவசம்.. பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழாவில் இன்று சிறப்பு கருத்தரங்கம்! டாபிக் தான் ஹைலைட்
கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெங்களூர் அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில் 2வது தமிழ் புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2வது தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தமிழ் மொழி குறித்த கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கருத்தரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் விழாவின் 9 வது நாளான இன்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரம் நடைபெற உள்ளது. ‛அறிவியல் நூலும் ஆற்றல் தமிழும்’ என்ற பெயரில் கருத்தரங்கள் நடைபெறுகிறது. இதற்கு எழுத்தாளரும், கவிஞருமான கே.ஜி. ராஜேந்திரபாபு தலைமை வகிக்க உள்ளார்.
அக்னி சிறகுகள் (டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்) என்ற தலைப்பில் புலவர் கி.சு இளங்கோவன் கருத்துரை வழங்குகிறார். இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை (டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை டாக்டர் வி.டில்பாபு) பேராசிரியர் முனைவர் தி.சரசுவதி, வளரும் அறிவியல் களஞ்சியம் (டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, இ.கே.டி.சிவக்குமார்) கவிஞர் தேன்மொழி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
1 கோடி பேருக்கு தமிழ் கற்பிக்க இலக்கு! கர்நாடகா சுற்றுலாத்துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் ஆர்வம்
மேலும் பெரியாரும், அறிவியலும் (டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை) கவிநிலவும் இர.தேன்மொழி, சுதந்திர இந்தியாவின் பொறியில் புரட்சிகள் (டாக்டர் வி டில்பாபு) பொறியாளர் ஹரீஷ் சின்னராஜன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
அதன்பிறகு ‛மண்பாடும் பண்பாடு’ எனும் தலைப்பில் ‛சிந்தனை களம்’ நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு கர்நாடா அரசின் தொழில்துறை முதன்மை செயலாளரான செல்வக்குமார் ஐஏஎஸ் தலைமை வகிக்க உள்ளார். கவியருவி அப்துல் காதர் சிந்தனை உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி .மதியழகன் வரவேற்புரை வழங்குகிறார். பொருளாளர் க.தினகரவேலு நன்றியுரை ஆற்ற உள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications