1 கோடி பேருக்கு தமிழ் கற்பிக்க இலக்கு! கர்நாடகா சுற்றுலாத்துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் ஆர்வம்
பெங்களூர்: கர்நாடகாவில் வசிக்கும் ஒருகோடி தமிழர்களுக்கு தமிழ் கற்று கொடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரியும், அம்மாநில சுற்றுலாத்துறை இயக்குனருமான ராம் பிரசாத் மனோகர் ஆர்வமாக ஐடியா கூறினார்.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ராம்பிரசாத் மனோகர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தான் இவரது சொந்த ஊர். கடந்த 2010ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் கர்நாடகாவில் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

பல்லாரி மாவட்ட கலெக்டர், பெங்களூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், கர்நாடகா தொழில்துஐற உள்கட்டமைப்ப மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் உள்பட பல பொறுப்புகளை திறமையாக நிர்வகித்து வந்தார்.
இதற்கு முன்பு பெங்களூர் மாநகராட்சி வருவாய் துறை சிறப்பு கமிஷனராக செயல்பட்ட ராம்பிரசாத் மனோகர் இப்போது கர்நாடகா அரசின் சுற்றுலாத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதோடு கூடுதல் பொறுப்பாக மனோகர் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தான் பெங்களூர் நகர் முழுமைக்கும் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு பெங்களூர் நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் செய்வது என்பது சவாலான காரியமாகும். இந்த சவாலை வெற்றிகரமாக செய்வார் என்ற நம்பிக்கையில் கர்நாடகா அரசு ராம்பிரசாத் மனோகருக்கு அந்த வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் தான் ‛‛கர்நாடகாவில் ஒரு கோடி தமிழருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும்'' என அவர் பேசியுள்ளார் . அதாவது கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூர் அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில் 2வது தமிழ் புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது.

விழாவின் 3வது நாளில் தமிழ் மொழி திறன் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதோடு ‛‛தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தமிழ் வளர்கிறது.. தளர்கிறது..'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதையடுத்து 2வது தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரை ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டதோடு, ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தக கூப்பன்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த வேளையில் தான் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழியை அனைவரும் கற்று கொடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஜெர்மனி மக்கள் தங்கள் நாட்டு மொழியை குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி கொடுக்கின்றனர். அதேபோல் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க முயற்சி செய்வது இல்லை. இனி ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். தமிழில் பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மொழியை வளர்க்க முடியும். கர்நாடகாவில் ஒரு கோடி தமிழர்ளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க இலக்கு நிர்ணயிப்போம்'' என்றார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications