டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்திய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) கடந்த 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட 25 கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரையிலான மின்மாற்றிகள் தொடர்பான டெண்டரில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்த டெண்டர் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததுடன், சில தனிநபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறையற்ற ஆதாயம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

CBI

கடந்த 2021 முதல் 2023 ஆம் வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் மின்சார வாரிய டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+