மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட விலையில்லா புத்தகப் பைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்காக இலவசமாக வழங்கப்படும் புத்தகப் பைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரையும், முதலமைச்சரின் புகைப்படங்களும் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் விஜய் முதல்வரான இந்த ஆண்டு முதல், புத்தக பையில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் திருக்குறளும் அதற்கான பொருளும் இடம் பெற்றிருந்தன. இதனை பல விஜய் ரசிகர்கள் பாராட்டியதால், திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஸ்டிக்கர் அரசு என்று விமர்சிக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படடன. பொதுவாக பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயெ 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று, நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களாக பாடபுத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அப்படி வழங்கப்பட்டுள்ள புத்தகப் பைகள் தற்போது அரசியல் கட்சிகளின் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்களால் விவாதப்பொருளாக மாறி உள்ளது. பொதுவாக, கடந்த காலத்தில் அதிமுக ஆட்சிகளின் போது பள்ளி மாணவ, மாணவியருக்காக இலவசமாக வழங்கப்படும் புத்தகப் பைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரையும், முதலமைச்சர் மற்றும் கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் பிரிண்ட் செய்யப்பட்டுத்தான் வரும். ஆனால் அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மணவியருக்கு வழங்கிய இலவச புத்தக பைகளில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் திருக்குறளும் அதற்கான பொருளும் இடம் பெற்றே வந்தது.
இப்படியான சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது. இந்த ஆண்டும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தக பைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரையும், திருவள்ளுவரின் திருக்குறளும் அச்சிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த தவெகவினர், இது நாள் வரை பள்ளி குழந்தைகளின் புத்தகப் பைகளில் முதலமைச்சர் மற்றும் கட்சி தலைவர்களின் புகைப்படமே அடையாளமாக இருந்த காலம் மாறி, எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், முதலமைச்சர் விஜய் மற்றும் கட்சித் தலைவர்களின் அடையாளங்கள் இடம் பெறாமல், திருக்குறளும் அதன் பொருளும் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்று பாராட்டினார்கள்.
இதுவே கருணாநிதி - ஸ்டாலின் ஆட்சியா இருந்தா பையில் பாதி இடம் கலைஞர் புகைப்படம் இருந்திருக்கும்.
— Shakthimaan (@Shakthimaan__) June 5, 2026
எவ்வளவு நல்லது பண்ணாலும் விஜய் மக்கள் கண்ணுக்கு கெட்டவராக தெரிந்தால், விஜய்க்கு ஓட்டு போடாதவர்கள் தான் நிஜ தற்குறி.. pic.twitter.com/AmHgZUDASn
பாருங்கள் எங்கள் தலைவரை எப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பாராட்ட தொடங்கினார்கள். யார் புகைப்படம் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இது மக்கள் ஆட்சி என்று விஜய் ஆட்சியை வரிசையாக தவெகவினர் பாராட்ட தொடங்கினார்கள்.
ஆனால், பாராட்டுகள் வைரான சிறிது நேரத்திலேயே தவெகவினருக்கு திமுகவினர் பதிலடி கொடுக்க தொடங்கினார்கள். ஏனென்றால், அந்த திருக்குறளுக்கு கலைஞர் அளித்த விளக்கத்தை அச்சடித்துள்ளனர்.வெறும் 15 நாட்களில் லட்சக்கணக்கான பேருக்கு டெண்டர் விட்டு, அழகாக கலைஞர் உரையோடு பிரிண்ட் அடித்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்து இருக்கிறார். தவெக அரசு கொண்டு வந்த மாற்றத்தில் ஏன் கலைஞர் உரையை கொண்டுவர வேண்டும். ஆக இந்த புத்தக பைகள் அனைத்தும் திமுக ஆட்சியின் போதே தயார் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவின் எல்லா திட்டங்களிலும் விஜய் அரசு தன்னுடையதாக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
15நாட்களில் லட்சக்கணக்கான பேக்குக்கு டெண்டர் விட்டு, அழகா கலைஞர் உரையோட பிரிண்ட் அடிச்சு, நேத்து பசங்களுக்கும் கொடுத்துட்டாங்கன்னு நம்பும் கூட்டம் இருக்கும் வரை விஜய்க்கு பக்கா மாஸ்தான் 🤨 https://t.co/GHqZG4tRMT
— Ravi Chandar (@ravikchandar) June 5, 2026
ஏனெனில் புத்தக பைகளில் திருக்குறளையும், அதற்கான பொருளையும் அச்சிடும் முறை ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்தே இருந்துள்ளது. கடந்த ஆட்சியில் டெண்டர் விட்டு, வழங்கப்பட்ட புத்தகங்களே இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தஆண்டு தான் விஜய் அரசால் புத்தகங்கள், நோட்டுக்கள் மற்றும் புத்தகங்களை வழங்க முடியும். ஆனால் தவெகவினர்,விஜய் அரசை பாராட்டுவதாக நினைத்து பழைய விஷயங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தெரியாமல் விஜய் செய்ததாக பேசியதால், இப்போது திமுகவினர் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications