சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஆட்சியில் மாதந்தோறும் கட்சி நிதி என்ற பெயரில் ரூபாய் 100 கோடிக்கு மேல் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
இதனால், அந்த துறையை நிர்வகித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருவாயில், மாதந்தோறும் ரூ.102 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக கட்சி நிதி என்ற பெயரில் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் வருவாய் முறைகேடுகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் நடவடிக்கை மீது விரிவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்வர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தர்விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. டாஸ்மாக் கடைகளை இயக்குவது, மதுபானங்கள் கொள்முதல் மற்றும் கிடங்குகளிலிருந்து மதுபானங்களை கொண்டு வருவது, சில்லறை விற்பனை நிலையங்களின் நடவடிக்கைகள் மற்றும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது, சில்லறை விற்பனைக் கடைகளில் பணத்தை வசூல் செய்யும் அமைப்புகள் என அனைத்திலும் ஒரு மிகப்பெரிய நிர்வாக சீரமைப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த துறையை நிர்வகித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications