‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 'பப்ஜி' விளையாட்டால் மொத்த குடும்பமும் சிதைந்துள்ளது. 18 வயது நிரம்பிய இளைஞர் பப்ஜி கேமுக்கு அடிமையாகி இருந்ததோடு தனது தந்தை, அக்காளை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். அவரது தாய் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

18-year-boy-who-pubg-addict-killed-father-sister-and-his-mother-critical-in-koppal

தற்போது சிறுவர்கள், இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவது மற்றும் குறிப்பிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்நிலையில் தான் மிகவும் பிரபலமாக இருக்கும் 'பப்ஜி' கேமுக்கு அடிமையான இளைஞரால் அவரது மொத்த குடும்பமும் சிதைந்துள்ளது.

அப்படி என்ன நடந்தது? 'பப்ஜி' கேம் எப்படி ஒரு குடும்பத்தையே சிதைத்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அயோத்தி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி நாயுடு (வயது 45). இவருக்கு திருமணமாகி சவுஜன்யா(40), என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரகதி(19) என்ற மகளும், வெங்கடமணி (18) என்ற மகனும் உள்ளனர்.

வெங்கடமணி கங்காவதியில் உள்ள பி.யூ. கல்லூரி ஒன்றில் படித்து வந்ததோடு 'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். ஆனால் வெங்கடமணி தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. காலை எழுந்தவுடன் பப்ஜி விளையாடுவது, மாலையில் கல்லூரி முடிந்து வந்தவுடன் 'பப்ஜி' விளையாடுவது என்று அந்த 'கேமுக்கு' அடிமையாகி இருந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென இரவு 10 மணியளவில் வெங்கடசாமி நாயுடு மற்றும் அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் அலறும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். வீட்டில் வெங்கடசாமி நாயுடு, அவரது மனைவி சவுஜன்யா, மகள் பிரகதி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். வெங்கடமணி கையில் கத்தியுடன் நின்றதோடு, அவர் தன்னை தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் 4 பேரையும் மீட்பு கொப்பல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி நாயுடு மற்றும் அவரது மகள் பிரகதி ஆகியோர் இறந்தனர். வெங்கடமணிக்கும், அவரது தாய் சவுஜன்யாவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது 'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான வெங்கடமணி, தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். நேற்று இரவும் இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 3 பேரையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தந்தை, அக்காவை கொன்றார். தாய் கத்திக்குத்து காயங்களுடன் சிகிச்சையில் உள்ளதோடு, வெங்கடமணியும் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+