கெஸ்ட் ஹவுஸில் அத்துமீறிய பள்ளி ஆசிரியை.. ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே? 10 வயது சிறுவனின் பரிதாபம்
மும்பை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்று, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக பெற்றோர் புகார் தரப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..

போக்சோ சட்டங்கள்: இத்தனைக்கும் பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.. அப்படியிருந்தும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. சமீபகாலமாக , சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
அதிலும் பெண்களே போக்சோவில் கைதாகி வருவது அதற்கு மேல் கலக்கத்தை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. இதில் கைதாகும் பெண்கள், ஆசிரியைகள் என்பது உச்சக்கட்ட வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதோ பெங்களுரில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
தானே குடும்பம்: மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில், ஷில் - பாடா என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறான் 10 வயது சிறுவன்.. பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் இந்த சிறுவனை, அவனது பெற்றோர் படிக்க வைத்து வருகிறார்கள்.. இந்த பள்ளியின் ஆசிரியைக்கு, 10 வயது சிறுவன் மீது தவறான பார்வை விழுந்துள்ளது..
ஒருகட்டத்தில், சிறுவனை விருந்தினர் அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார்.. பலமுறை விருந்தினர் அறைக்கு, சிறுவனை அழைத்து சென்று ஆசிரியை பலாத்காரம் செய்ததாவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், உன்னுடைய அம்மாவையும், அப்பாவையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.. இதனால் சிறுவனும் பயந்துகொண்டு, யாரிடமும் இதை பற்றி சொல்லாமல் இருந்துள்ளான்.
அதிர்ச்சி பெற்றோர்: நாளுக்கு நாள் ஆசிரியையின் தொல்லை எல்லைமீறிய நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து, தன் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறான்.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதன்படி, 22 வயதான ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படி நடந்து கொண்டிருப்பதும், போக்சோவில் கைதாவதும், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications