பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பெங்களூர் ஐடி ஊழியரை அதிரடியாக கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்
பெங்களூர்: கர்நாடகாவில் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகத் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கர்நாடக தலைநகர் பெங்களூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து அவரை கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் ஆரிப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தலைநகர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப் இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்ததாகவும், அந்த பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்டிருந்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆரிப் கடந்த மார்ச் மாதம் ஈரான் வழியாக சிரியாவுக்குப் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரிப் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள், அவரது லேப்டாப் மற்றும் பிற கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், தனிசந்திரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வேறு எதாவது முக்கிய ஆவணங்கள் கிடைக்கிறதா என்றும் தேடி வருகின்றனர். ஆரிப் டெலிகிராமில் செயலில் ஆக்டிவாக இருந்ததாகவும் அவர் மீண்டும் சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications