ஐடியில் 19 வருட அனுபவம்.. காலம் செய்த கோலம்! இப்போது ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் பெங்களூர் நபர்!
பெங்களூர்: ஒரு காலத்தில் தனியாக ஒரு ஐடி நிறுவனத்தையே நடத்தி வந்த ஒருவர், இப்போது பெங்களூரில் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்து வருகிறார்.. யார் அந்த நபர்.. அவருக்கு என்ன நடந்தது.. அவர் ஏன் இதுபோன்ற சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மனிதர்கள் எப்போதும் பல கனவுகளைக் கொண்டவர்கள். அந்த கனவுகளின் வெளிப்பாடாகவே உலகம் இப்போது இப்படி வளர்ந்து நிற்கிறது. ஆனால், எல்லா கனவுகளும் வெற்றி அடைவதில்லை. சில கனவுகள் நிறைவேறாமல் போகும் போது அது பெரிய அடியையும் கொடுக்கிறது. அப்படி தனது கனவுகளை அடைய முடியாத ஒருவரின் ஸ்டோரி தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஸ்விக்கி டெலிவரி
பெங்களூரில் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு உணவை டெலிவரி செய்ததோடு மட்டுமல்லாமல், பிஸ்னஸில் தான் எதிர்கொண்ட சவால் குறித்தும் பகிர்ந்து கொண்டார். 19 வருடங்கள் ஐடி துறையில் வேலை செய்த அவர், ஃபுல் ஸ்டாக் டெவலப்மெண்ட்டில் அனுபவம் கொண்டவராம். அவர் தான் இப்போது ஸ்விக்கியில் டெலிவரி பார்ட்னராக இருக்கிறார்.
என்னாச்சு?
பத்மநாபன் எப்பாஸ் என்ற அந்த நபர் நிதிஷ் குமாருக்கு உணவை டெலிவரி செய்துள்ளார். அத்தோடு நிதிஷிடம் ஒரு சிறு குறிப்பையும் அளித்துள்ளார். அந்த குறிப்பில், "அன்புடன் உங்கள் உணவு டெலிவரி செய்யப்பட்டது" என்று இருந்தது. பத்மநாபன் பல ஆண்டுகளாக ஐடி துறையில் வேலை செய்தவர். மேலும், அவர் ஒரு வெற்றிகரமான ஐடி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். ஆனால், பிஸ்னஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் இப்போது அவர் உணவு டெலிவரி செய்து வருகிறார்.
ஐடி நிறுவனத்தை நடத்தியவர்
இது குறித்து நிதிஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் இதை என்னிடம் கொடுத்தார். பத்மநாபன் 19 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட புல் ஸ்டாக் டெவலப்பர்.. அவர் ஒரு காலத்தில் ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். நான் அவரிடம் வேலை ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை, நான் எனது பிஸ்னஸை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரவே முயல்கிறேன் எனப் புன்னையுடன் சொன்னார்.. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். ப்ளீஸ் ஷேர்" என பதிவிட்டிருக்கிறார்.
பத்மநாபனின் அனுபவம் மற்றும் திறன்களை எடுத்துக்காட்டும் வகையில் வேறு சில தகவல்களையும் நிதிஷ் பகிர்ந்துள்ளார். பதம்நாபன் தனது லிங்கட் இன் குறிப்பில், "நான் பத்மநாபன் எப்பாஸ் - 19 வருடங்களுக்கு மேலான அனுபவம் உள்ள ஒரு புல் ஸ்டாக் டெவலப்பர்.. மேலும் இன்று உங்களின் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர். நான் ஒரு காலத்தில் ஐடி நிறுவனத்தை நடத்தி வந்தேன். சர்வதேச அளவில் கிளையன்ட்களுக்கு செயலிகளை உருவாக்கியுள்ளேன்.
மீண்டும் வருவேன்!
இன்று நான் உணவை டெலிவரி செய்கிறேன்.. வெறுமன குடும்பத்தை நடத்த மட்டும் இதை நான் செய்யவில்லை.. புதிதாக ஒன்றை உருவாக்கவும் இதைச் செய்கிறேன். எனது ஒவ்வொரு டெலிவரியும் எனது பிஸ்னஸை மேலும் உயர்த்த உதவுகிறது. உங்களுக்கோ அல்லது உங்கள் பிஸ்னஸுக்கோ உதவ நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நிதிஷின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டானது. பலரும் பத்மநாபனின் முயற்சியைப் பாராட்டினர். சிலர் அவருக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.. குறிப்பாக இப்போது பிஸ்னஸை டெவலப் செய்ய உதவும் ஏஐ டூல்கள் குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். நெட்டிசன் ஒருவர், "கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டார். மற்றொரு நபர், "கனவுகள் இறப்பதில்லை. நாம் மீண்டும் எழும்பும் வரை அவை காத்திருக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications