Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் டிராபிக்கிற்கு எண்ட் கார்டு? 35 மேம்பாலங்கள்..பிரம்மாண்டமாக நடக்க போகும் சூப்பர் விஷயம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று போற்றப்படும் பெங்களூர், ஐடி ஊழியர்கள் பல லட்சம் பேர் வேலை செய்யும் நகரமாக இருக்கிறது. உலகின் முன்னிணி ஐடி நிறுவனங்கள் அத்தனையும் பெங்களூரில் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இங்கு நாள்தோறும் புதிதாக ஆயிரக்கணக்கானோர் குடியேறுகிறார்கள். இதனால் தினசரி 2000 புதிய வாகனங்கள் பெங்களூர் நகரில் வருகின்றன. இதனால் கட்டுக்கடுங்காத நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 25 சுரங்கப்பாதைகள், 35 மேம்பாலங்கள் மற்றும் 101 நடை மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக நெரிசலான நகரங்களில் பெங்களூர் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் புறநகர் ரயில்கள் ஓடுகின்றன. இது நெரிசலை பெருமளவு கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பெங்களூரில் நெரிசலை கட்டுப்படுத்த மின்சார ரயில்கள் ஓடவில்லை. பெங்களூர் போல சம காலத்தில் வளர்ந்த ஹைதராபாத்தில் மின்சா ரயில்கள் 2003ம் ஆண்டில் இருந்து ஓரளவு முக்கிய வழித்தடத்தில் ஓடுகின்றன. அதுபோல் கூட பெங்களூரில் இல்லை...

Bangalore traffic A plan has been formulated to construct 35 flyovers 25 underpasses 101 skywalks

புறநகர் மின்சார ரயில் இல்லை

பெங்களூரில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் வர வேண்டும் என்று சர்வதேச விமான நிலையத்தை மிகப்பெரிய அளவில் அற்புமாக மாற்றினார்கள்.. சாலைகளை அழகாக மாற்றினார்கள்.. அத்துடன் மெட்ரோ ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் அதே அளவு முக்கியத்துவத்தை புறநகர் ரயில்களை கொண்டுவருவதில் காட்டவில்லை. இதனால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இனிமேல் தான் பெங்களூரில் மின்சார ரயில முழுமையாக வரப்போகிறது. அதேபோல் மெட்ரோ ரயில்கள் ஓடினாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் அளவிற்கு இல்லை..

35 மேம்பாலங்கள்

எனவே பெங்களூர் சாலைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 25 சுரங்கப்பாதைகள், 35 மேம்பாலங்கள் மற்றும் 101 நடை மேம்பாலங்கள் அமைக்கலாம் என போக்குவரத்து காவல்துறை பரிந்துரைத்துள்ளது. அத்துடன் பெங்களூர் முழுவதும் 3,700-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்ய பெங்களூரு பெருநகர அதிகார அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள், நகரின் நெரிசல் மிகுந்த இடங்கள், விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து முட்டுக்கட்டைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நடத்தப்பட்ட விரிவான தணிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2000 புதிய வாகனங்கள்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்ட செய்திகளின் படி, பெங்களூர் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில் "தினமும் சுமார் 2,000 புதிய வாகனங்கள் சாலைகளில் சேருவதால், நகரின் உள்கட்டமைப்பு அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது. காவல்துறையினர் அளித்த பரிந்துரையில், கிழக்கு பெங்களூருவில் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக மகாதேவபுரா மற்றும் ஒயிட்ஃபீல்ட் ஆகிய பகுதிகள் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் பெரும்பாலான மேம்பாலங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன" என்று என்று கூறினார்கள்.

பெங்களூரில முக்கிய இடங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள்

ஹெப்பல், சாரக்கி சர்க்கிள் மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள டால்மியா சந்திப்பு உள்ளிட்ட 25 முக்கிய சந்திப்புகளைச் சிக்னல் இல்லாத போக்குவரத்திற்காக, சுரங்கப்பாதைகள் அல்லது தரம் பிரிக்கப்பட்ட சாலைகள் மூலம் மாற்றியமைக்க வேண்டும் என்று ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தூர் கோடி, தொம்மசந்திரா, குஞ்சூர், எச்.ஏ.எல் பழைய விமான நிலைய சாலை மற்றும் எலகங்கா ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து இணை ஆணையர்

பெங்களூர் போக்குவரத்து இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி இதுபற்றி கூறுகையில், "போக்குவரத்து அடர்த்தி, விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் சந்திப்புகளின் செயல்பாடு குறித்த துல்லியமான தரைமட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் உள்ளன. எனவே நெரிசலை குறைக்க நாங்கள் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக்குவது மற்றும் போக்குவரத்து மேலாண்மை சீர்திருத்தங்கள் ஆகியவற்றை உருவாக்க விரும்புகிறோம். நெரிசலைக் குறைக்க வேண்டுமானால் சிக்னல் இல்லாத வழித்தடங்கள், முட்டுக்கட்டைகளை நீக்குதல் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை அவசியம்," என்றார்.

என்னென்ன மாற்றங்கள்

கர்நாடகா அரசுக்கு அளிக்கப்பட்ட இந்த பரிந்துரை திட்டத்தில் பெங்களூர் நகரம் முழுவதும் 2,340 புதிய போக்குவரத்து தகவல் பலகைகள், 707 சாலைப் பகுதிகளில் தெர்மோபிளாஸ்டிக் குறியீடுகள், 103 பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்தல் மற்றும் சீரான போக்குவரத்து ஓட்டத்திற்காக 63 பஸ் பேக்க்களை உருவாக்குதல் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


பெங்களூரில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள்

பெங்களூரில் ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட பாதசாரிகள் உயிரிழக்கிறார்கள். இதற்கு காரணம் சாலையை கடப்பதற்கான போதிய உள்கட்டமைப்பு இல்லாதது காரணமாக இருக்கிறது. எனவே நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 137 இடங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதையும் சரி செய்ய வேணடும். அதே நேரத்தில் மோசமாக வடிவமைக்கப்பட்ட 84 வேகத்தடைகள் அகற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

எப்படி செய்வோம்

பெங்களூரு பெருநகர அதிகார அமைப்பின் தலைமை ஆணையர் மகேஷ்வர் ராவ் இதுபற்றி கூறும் போது, "இதுவரை நாம் பார்த்ததிலேயே மிகவும் விரிவான போக்குவரத்து தணிக்கைகளில் இதுவும் ஒன்று. எனினும் 35 மேம்பாலங்கள், 25 சுரங்கப்பாதைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நடை மேம்பாலங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதித் திட்டமிடல் ஆகியவை அதிக அளவில் தேவைப்படும். எனவே இந்தப் பரிந்துரைகளைத் தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து விரிவாக்கங்களுடன் ஒருங்கிணைப்போம்" என்று உறுதி அளித்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+