அசுரனாக நிற்கும் ஹைதராபாத்.. பெங்களூர் நிலை பரிதாபம்.. எதில் தெரியுமா! உண்மையை தெரிஞ்சா ஷாக் ஆவீங்க
பெங்களூர்: இந்தியாவில் ஐடி துறையில் இரு முக்கிய நகரங்களாக பெங்களூரும் ஹைதராபாத்தும் இருக்கிறது. இதற்கிடையே பெங்களூர் நகரின் அவுட்டர் ரிங் சாலையை ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் சாலையுடன் ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் டிராபிக் மிக மோசமாக இருப்பதாக நெட்டிசன்கள் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே பெங்களூர் அவுட்டர் ரிங் சாலை மற்றும் ஹைதராபாத் அவுட்டர் ரிங் சாலைகளை ஒப்பிட்டு நெட்டிசன் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பெங்களூர் vs ஹைதராபாத்
முன்பே குறிப்பிட்டது போல பெங்களூர் டிராபிக் மற்றும் மோசமான சாலைகள் குறித்து நெட்டிசன்கள் புலம்பி வரும் சூழலில், இந்த ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதர்சன் என்பவர் தனது ட்விட்டரில் இது தொடர்பான போஸ்ட்டை பதிவிட்டிருந்தார். அதில் அவர் இரு நகரங்களின் அவுட்டர் ரிங் சாலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் சுட்டிக்காட்டியிருந்தார்.. ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் சாலை 8 லேன்களுடன் எந்தவொரு குண்டும் குழியும் இல்லாமல் சுத்தமாக இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மிக மோசம்
ஆனால், பெங்களூர் அவுட்டர் ரிங் சாலை அதற்கு நேர்மாறாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். பெங்களூரின் அவுட்டர் ரிங் சாலையில் சரியான லேன் குறியீடுகள் கூட இல்லை என்று அவர் சாடுகிறார். மேலும், சாலைகள் குண்டும் குழியுமாகப் பள்ளங்களுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஹைதராபாத்தின் ஓஆர்ஆர் சாலை நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் உள்ள நிலையில், பெங்களூர் ஓஆர்ஆர் சாலைக் குப்பைகள் நிறைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "நான் சுட்டிக்காட்டும் வேறுபாடு உண்மை.. ஒரு மாதத்திற்குள் கிரேட்டர் பெங்களூர் ஆணையம் ஐடி தலைநகருக்கு நீதி வழங்கும் என நம்புகிறேன்" என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும், "பெங்களூர் நகரை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இந்த போஸ்ட்டை பதிவிடவில்லை.. பெங்களூருக்குச் சிறந்த கட்டமைப்புகள் தேவை என்பதை வலியுறுத்துவதே இதன் முக்கியக் குறிக்கோள். பெங்களூர் நகரை அனைவரும் நேசிக்கிறோம். சாலைகள் உள்ளிட்ட அனைத்திலும் பெங்களூர் மற்ற நகரங்களை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என்று பதிவிட்டுள்ளார்.
Hyderabad ORR vs Bangalore ORR
— Sudarshan (@sudarshanindi) October 30, 2025
8 Lanes vs No lanes (zero marking)
Smooth vs Bumpy with potholes
Clean vs Garbage
I rest my case. Hope within a month GBA does justice to Silicon City
@ChristinMP_ @kiranshaw @TVMohandasPai pic.twitter.com/0x0NyAzfjK
வெடித்த விவாதம்
மேலும், அவர் இரு அவுட்டர் ரிங் சாலைகளை ஒப்பிட்டும் வகையில் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் குறிப்பாக பெங்களூர் மற்றும் ஹைதராபாத் மக்கள் இது தொடர்பாகப் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்கள். பெரும்பாலான நபர்கள் அவர் சொல்வது சரி என்றே பதிவிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "என்னைப் பொறுத்தவரை இரு நகரங்களின் அவுட்டர் சிங் சாலைகளை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது. இரு நகரங்களின் ஹிஸ்டரி வேறு.. ஹைதராபாத் வெளிவட்டச் சாலையை அப்படியே ஒப்பிட முடியாது.. நீங்கள் ஹைதராபாத்தின் காச்சிபௌலி மற்றும் எஃப்.டி. சாலைகளை பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையுடன் ஒப்பிடலாம்.. அப்போதும் பெங்களூர் சாலை தான் மோசம் என்பது வேறு கதை" என்று பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் தான் பெஸ்ட்
இன்னொரு நபர், "ஹைதராபாத் வெளிவட்டச் சாலை என்பது நாட்டின் மிகச் சிறந்த திட்டமிடப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் அவுட்டர் ரிங் சாலையாகும். அது நிஜமாகவே மிகச் சிறந்தது.. நகரை சுற்றி 200 கி.மீ நீளத்திற்கு ஒரு சரியான வட்டத்தில் சாலை இருக்கிறது. சுமார் 20 என்டரி/ எக்ஸிட் வழிகள் மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ.. இதை வேறு எந்த நகரத்தோடும் ஒப்பிடுவது கடினம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இன்னொரு நபர் பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையின் ரியல் சிக்கலை விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர், "பெங்களூரை பொறுத்தவரை அது பெயருக்கு மட்டுமே அவுட்டர் ரிங் சாலை.. இப்போது அது நகருக்கு உள்ளே வந்துவிட்டது. எனவே, அதை அவுட்டர் ரிங் சாலை என சொல்வதில் அர்த்தமே இல்லை.. 15 ஆண்டுகளுக்கு முன்புதான் அது அவுட்டர் ரிங் சாலையாக இருந்தது" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications