Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் தோழி படுக்கையறையில்.. விடிகாலை நாற்காலியில் பீதியை கிளப்பிய கணவன்.. பெங்களூரில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில், கடந்த 2 நாட்களாகவே அதிர்ச்சியில் உள்ளது.. இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது கர்நாடக மாநிலம் பெங்களூரில்? யாரிந்த தோழி?

நவ்யஸ்ரீ என்ற பெண்ணுக்கு 25 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் கிரண்.. இவர்கள் எஸ்எம்வி லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார்கள். ஆனால், இந்த தம்பதிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.. இதனால் இவர்களுக்குள் தகராறு, சண்டைகள் அதிகமாக வந்ததாகவும் கூறப்படுகிறது.

dance master

இதனால், நவ்யஸ்ரீ மனவேதனையில் இருந்துவந்தார்.. கடந்த 3 நாளைக்கு முன்பு, தன்னுடைய தோழி ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு புலம்பி இருக்கிறார் நவ்யஸ்ரீ.. தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும், கணவருடன் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்..

இதைக்கேட்டதும் ஐஸ்வர்யாவுக்கு மனம் கலங்கிவிட்டது. இவ்வளவு மனவருத்தத்திலுள்ள தன்னுடைய தோழி நவ்யஸ்ரீயை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் ஐஸ்வர்யா..

நண்பர் அணில்: இதற்காக, இன்னொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. தன்னுடைய நண்பர்கள் 2 பேரும் வீட்டுக்கு வந்ததால், அவர்களிடம் நவ்யஸ்ரீ தன்னுடைய மொத்த பிரச்சனையையும் ஒன்றுவிடாமல் சொல்லி அழுதுள்ளார்.. பிறகு 3 பேருமே இந்த திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார்... இறுதியில், மறுநாள் காலையில், தன்னுடைய கணவர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் நவ்யஸ்ரீ.

dance master

இதையடுத்து 3 பேருமே இரவு ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.. அனில் அவருடைய வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. இரவு நேரமாகிவிட்டதால், ஐஸ்வர்யா நவ்யஸ்ரீ வீட்டிலேயே அன்றைய இரவு தங்கியுள்ளார்.

மனைவி நவ்யஸ்ரீ: மறுநாள் காலை ஐஸ்வர்யா தூங்கி எழுந்து பார்த்தபோது, நவ்யஸ்ரீ பிணமாக கிடப்பதை கண்டு அலறினார்.. நவ்யஸ்ரீயின் கழுத்து நெறிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இதையடுத்து, போலீசாருக்கு உடனே ஐஸ்வர்யா தகவல் அளித்ததுடன், தன்னிடம் நவ்யஸ்ரீ பகிர்ந்து கொண்ட அனைத்து விவரங்களையும் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, கிரணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. நேற்றிரவு தோழிகள் 2 பேரும் தூங்கியதுமே, தன்னிடமிருந்த இன்னொரு சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து, நவ்யஸ்ரீயின் கழுத்தை நெரித்து கிரண் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

dance master

பிள்ளைகள்: நவ்யஸ்ரீ ஒரு டான்ஸ் மாஸ்டராம்.. பிள்ளைகளுக்கு நடனம் கற்றுகொடுத்து வருகிறார்.. இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகின்றன.. ஆனால், திருமண நாளிலிருந்தே நவ்யஸ்ரீ மீது, கிரணுக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. நவ்யஸ்ரீ மீது கிரணுக்கு ஏற்கனவே நிறைய சந்தேகம் உள்ளதாம்.. இந்த சந்தேகம்தான், தம்பதிக்குள் தகராறுகள் வருவதற்கு பிரதான காரணமாக இருந்திருக்கிறது..

ஐஸ்வர்யாவுக்கு போனை செய்து நவ்யஸ்ரீ பேசியபோதுகூட, தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றுதான் சொன்னாராம். அதனால்தான், மற்றொரு நண்பர் அணில் என்பவரையும் அழைத்து இதுகுறித்து தோழிகள் விவாதித்திருக்கிறார்கள். போலீசுக்கு போனால்தான், பாதுகாப்பு கிடைக்கும் என்று நண்பர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படியே, இன்று போலீசில் கணவர் மீது புகார் அளிக்க முடிவு செய்திருந்தாராம் நவ்யஸ்ரீ.

நாற்காலி: ஆனால் போலீசுக்கு செல்வதற்கு முன்பேயே மனைவியை தீர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாராம் கிரண்.. இரவு 11.30 மணிக்கு தோழிகள் படுக்கையில் தூங்க சென்றுள்ளனர்..

நள்ளிரவில் மாற்று சாவி மூலம் வீடு புகுந்த கிரண், நவ்யஸ்ரீயை நாற்காலியில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார்.. தொண்டையில் படுகாயங்கள் நிறைய இருந்ததாக சொல்கிறார்கள்.. கொடூர சித்ரவதைக்கு பிறகே கொன்றிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. கிரணை விசாரித்தால்தான், இதுகுறித்து முழு உண்மையும் தெரியவரும் என்கிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+