பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தை.. கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்.. பெங்களூரில் பகீர்
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையையே கொன்றுள்ளார். டெலிவரிக்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம் காரணமாகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண் குழந்தையைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு டெலிவரி முடிந்தவுடன் தீவிர மன அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்கள் பல நேரங்களில் மோசமான முடிவுகளையும் கூட எடுக்க நேரிடும். இதனால் டெலிவரிக்கு பிறகு எப்போதும் பெண்களுக்கு முழுமையான ஒரு சப்ரோர்ட் தேவைப்படும். ஆனால், இது குறித்து எல்லாம் நமது நாட்டில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

கொதிக்கும் நீர்
அப்படியொரு டெலிவரிக்கு பிறகு குழந்தையைத் தனியாக வளர்த்த பெண் ஒருவர் குழந்தையைக் கொடூரமாக கொன்றுள்ளார். இந்த மோசமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் அருகே உள்ள நெலமங்கலாவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் அடுப்பைப் பற்றவைத்து, ஒரு சமையல் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பின்னர் குழந்தையை அதில் போட்டதாகக் கூறப்படுகிறது.
பால் குடிக்க மறுத்த குழந்தை
அந்தப் பெண் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மன அழுத்தத்தால் (postpartum depression) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குழந்தை டெலிவரி தேதிக்கு முன்னதாகவே பிறந்துள்ளது. குறைமாதத்தில் பிறந்ததால் பால் குடிக்க மறுத்து, தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தை நார்மலாக இல்லை என்று அந்தப் பெண் நம்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் திங்கள்கிழமை அன்று விஸ்வேஸ்வரபுராவில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரின் வீட்டில் நடந்துள்ளது. மதுவுக்கு அடிமையான அவரது கணவர் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தார். மேலும், அந்தப் பெண்ணை பார்க்க வருவதையே கணவர் நிறுத்திவிட்டாராம். இதனால் பெற்றோர் வீட்டில் சில காலமாகத் தனியாகவே அந்தப் பெண் வசித்து வந்துள்ளார்.
நீரில் ஊற்றி கொலை
இந்தச் சூழலில் தீன் திங்கள்கிழமை சமையலறைக்குச் சென்ற அந்தப் பெண் அடுப்பைப் பற்றவைத்து, ஒரு சமையல் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்துள்ளார். பிறகு குழந்தையை அதில் போட்டார். இதில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்குத் தீவிர மனநலப் பாதிப்பு இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே இப்படியொரு மோசமான செயலை அந்தப் பெண் செய்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.
ஆட்டோவில் வைத்த தம்பதி
முன்னதாக கடந்த மே மாதம், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இப்படித் தான் 43 வயதான ஒருவர் தனது இரண்டு வார வயது பெண் குழந்தையை ஆட்டோவில் வைத்து விட்டு கிளம்பிவிட்டார். விராஜ்பேட்டை சேர்ந்த அப்பண்ணா என்ற அவர் ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை ஒரு ஆட்டோவில் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. குழந்தையைத் துணியில் சுற்றி ஆட்டோவின் பின் இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
உதடு பிளவுடன் பிறந்த அந்தக் குழந்தை அதிகாலை அழுதுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு காலை 5.50 மணியளவில் உள்ளூர்வாசிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குழந்தையை வாணி விலாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பண்ணா தான் குழந்தையைக் கைவிட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications