"கண்ட இடத்தில் தொட்டு.." அத்துமீறிய ஓட்டுநர்! பைக் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்! ஷாக்கிங் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:கர்நாடக தலைநகர் பெங்களூரில் 30 வயதான பெண் ஒருவரிடம் பைக் டாக்ஸியில் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் பைக் டாக்ஸி முறை இப்போது பிரபலமாகி வருகிறது.. ஆட்டோ ஓட்டுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல இடங்களில் போராட்டம் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் பிரச்சினையும் ஏற்பட்டே வருகிறது. சென்னையில் கூட சமீபத்தில் இது குறித்து பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.

 Bangalore Woman Jumps Off Bike After bike taxi Rider Tries To Grope Her

பைக் டாக்ஸி: இதுபோன்ற பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட பைக் டாக்ஸி முறை தொடர்ந்து பிரபலமடைந்தே வருகிறது. பைக் என்பதால் டாக்ஸியை போல இல்லாமல் கிடைக்கும் கேப்பில் புகுந்து ஓட்டுவார்கள் என்பதால் தேவையான இடத்திற்குச் சரியான நேரத்தில் சென்றுவிட முடிகிறது. மேலும், இத்துடன் சேர்த்து பயணத்திற்கான கட்டணமும் வெகுவாக குறைவதால் பலரும் இந்த பைக் டாக்ஸி பக்கமே திரும்பி வருகின்றனர்.

இருப்பினும், பைக் டாக்ஸிக்களிலும் சில ஷாக் சம்பவங்கள் நடந்தே வருகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெண் ஒருவர் ஓடும் பைக் டாக்ஸியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 Bangalore Woman Jumps Off Bike After bike taxi Rider Tries To Grope Her

கர்நாடகா: அந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் அந்த பெண்ணை தவறான இடங்களில் தொட்டுள்ளார் மேலும், அந்த பெண் சொன்ன இடத்தை தவிர்த்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன அந்த பெண் ஓடும் பைக்கில் இருந்து நடுவே குதித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் இரவு 11 மணியளவில் அந்த பெண் ராபிடோ செயலியில் பைக் டாக்ஸி புக் செய்து பயணித்த போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பெரும் பரபரப்பு: அன்றைய தினம் அந்த பெண் வழக்கம் போல பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். டிரைவர் வந்தவுடன் ஓடிபி சொல்லிவிட்டு பைக்கில் ஏறியுள்ளார். இருப்பினும், ஓடிபி செக் செய்ய வேண்டும் என சொல்லி டிரைவர் அந்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கியுள்ளார். மேலும், அந்த டிரைவர் உடனடியாக புக் செய்த திசைக்கு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்துள்ளார்.

மேலும், வாகனத்தை ஓட்டும் போது, அந்த பெண்ணை தவறான இடங்களில் தொட்டுள்ளார். அந்த நபர் குடிபோதையில் இருந்ததும் அப்போது தான் தெரிந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பெண் வாகனத்தை நிறுத்தும்படி கத்தியுள்ளார். இருப்பினும், அந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்துள்ளார்.

 Bangalore Woman Jumps Off Bike After bike taxi Rider Tries To Grope Her

கீழே குதித்து இளம்பெண்: இதனால் அஞ்சிய அந்த பெண் பெங்களூரு யெலஹங்காவில் உள்ள அப்ரார் பிஎம்எஸ் கல்லூரி அருகே பைக் வேகமாகச் சென்று கொண்டிருந்த போதிலும், அஞ்சி கீழே குதித்தார். ஓடும் பைக்கில் இருந்து இளம்பெண் குதித்ததைப் பார்த்த அந்த கல்லூரியின் காவலாளி ஓடி வந்து அந்தப் பெண்ணுக்கு உதவியுள்ளார்.

கல்லூரி காவலாளி அங்கே வருவதைப் பார்த்தவுடன் அந்த ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 30 வயதான அந்த பெண் கட்டுமான கலைஞராக உள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பைக்கில் இளம்பெண்ணிடம் அத்துநீறிய அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த 27 வயதான தீபக் ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+