சில்மிஷம் செய்த நபரை பிடித்து மிதித்த பெங்களூர் பெண்!
பெங்களூர்: பெங்களூர் பூங்காவில் காலையில் ஜாகிங் சென்ற பெண்ணை சீண்டினார் ஒரு நபர். கோபமடைந்த அவர் பயந்து ஓடாமல், அந்த நபரைத் துரத்திப் பிடித்து மிதித்து விரட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸிலும் புகார் கொடுத்த அப்பெண், அந்த சம்பவத்தையும் அப்படியோ வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கிலும் போட்டுள்ளார்.
எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள். வயது வித்தியாசமே இல்லை. குடித்து விட்டு தாறுமாறாக தவறுகளில் ஈடுபடுவது, பலாத்காரம் செய்வது என்று நாடு தாறுமாறாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபகாலமாக பல்வேறு பாலியல் கொடுமைகளைச் சந்தித்து வரும் பெங்களூரில் ஒரு துணிச்சல் மிகுந்த பெண், தன்னைச் சீண்டிய மனிதரை நையப்புடைத்துள்ளார்.
காலையில் ஜாகிங்
சம்பந்தப்பட்ட பெண் இதுகுறித்துக் கூறுகையில், நான் தினசரி ஒரு பூங்காவில் ஜாகிங் செல்வது வழக்கம். அதுபோல சம்பவத்தன்றும் (வெள்ளிக்கிழமை) போய்க் கொண்டிருந்தேன்.
சீண்டிய நபர்
அப்போது ஒரு நபர் என்னை சீண்டினார், கிண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த நான் அவரை விரட்டினேன். அவர் தப்பி ஓட முயன்றார். நான் விடவில்லை. தொடர்ந்து ஓடி அவரைப் பிடித்து உதைத்தேன்.
சரியான பாடம்
என்னைச் சீண்டிய அந்த நபருக்கு நான் சரியான பாடம் கற்றுக் கொடுத்தேன். அத்தோடு நில்லாமல் போலீஸிலும் புகார் கொடுத்தேன். அவர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு, ஆதரவு கொடுத்தார்கள்.
மாற்றத்தை நாம்தான் கொண்டு வர வேண்டும்
என்னைப் போல எல்லாப் பெண்களும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்றால் அதை நாம்தான் கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் இந்த வீடியோவையும் போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.
முழங்கால் போடுடா...
அந்த வீடியோவில் தன்னைச் சீண்டிய நபரை அந்தப் பெண் துரத்துகிறா். அந்த நபர் தனது ஹெல்மெட்டால் முகத்தை மறைத்தபடி சாலையில் ஓடுகிறார். ஆனால் விடாமல் துரத்தும் அந்தப் பெண் அந்த நபரைப் பிடிக்கிறார். பின்னர் அவரை முழங்கால் போட்டு உட்காரப் பணிக்கிறார். பின்னர் அவரை தனது காலால் மிதிக்கிறார். இதை பலர் பார்க்கிறார்கள். அதன் பின்னர் அந்த நபர் ஓடி வி்ட்டார். இந்தக் காட்சியை அந்தப் பெண்ணுடன் வந்த ஒருவர் படம் பிடித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications