மாஸ்டர் ஸ்கெட்ச்.. ஐயயோ.. இவர் சாதாரண பெண் இல்லை.. அந்த இருமல் மருந்துதான் எல்லாத்துக்கும் காரணமா?
பெங்களூர்: கடந்த 2 நாட்களாகவே, பெங்களுர் இளம்பெண் பற்றின செய்திதான் மக்களை அதிர வைத்து வருகிறது.. இந்த பெண்ணிடம் விசாரணையையும் போலீசார் துவங்கி உள்ளனர். என்ன நடந்தது?
பெங்களூருவை சேர்ந்த பெண் சுசனா சேத்.. தன்னுடைய 4 வயது மகனுடன் சனிக்கிழமையன்று, வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே ஓட்டலுக்கு சென்று, ரூம் எடுத்து தங்கியிருந்தார்.. நேற்று முன்தினம், அந்த ரூம் காலி செய்துவிட்டார். பிறகு, ஹோட்டல் நிர்வாகத்தினர் உதவியோடு பெங்களூருக்கு டாக்ஸி ஒன்றை புக் செய்தார்..
ஆனால், காரில் பயணம் செய்தால் 12 மணி நேரம் ஆகுமே? விமான பயணம் என்றால், ஒன்றரை மணி நேரத்திலேயே செல்லலாம், புக் செய்யலாமா? என்று என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

மறுத்துவிட்டார்: அதற்கு மறுத்த சுசனா சேத், டாக்ஸிதான் வேண்டும் என்று பிடிவாதமாக கேட்டுள்ளார்.. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்தினரே டாக்ஸி ஒன்றை புக் செய்து தந்தனர்.. இந்த பெண்ணும், ஓட்டலை விட்டு கிளம்பிவிட்டார். பிறகு, அவரது ரூமை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள்.. அங்கே ரத்தக்கறையை பார்த்ததுமே அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.. பிறகு, போலீஸாருக்கு தகவல் தந்துள்ளனர்.
போலீசார் ஓட்டலுக்கு விரைந்து வந்து விசாரித்தபோதுதான், அந்த பெண்ணுக்கு, ஓட்டல் நிர்வாகம் வாடகை வண்டியை புக் செய்து தந்தது தெரியவந்தது. இதனால், வாடகை வண்டி டிரைவருக்கு, செல்போனில் போலீசார் தொடர்புகொண்டனர்.. அந்த பெண் அதே காரில் உட்கார்ந்திருந்தாலும், அவருக்கு சந்தேகம் வராதவாறு, டிரைவரிடம் கொங்கணி மொழியில் போலீசார் பேசியிருக்கிறார்கள்.
போலி அட்ரஸ்: குழந்தை எங்கே என்று கேட்டதற்கு நண்பர் வீட்டில் இருப்பதாக சொல்லி ஒரு அட்ரஸை தந்தாராம் அந்த பெண்.. ஆனால், அந்த அட்ரஸில் சோதனை செய்ததில் அப்படி யாருமே அங்கில்லை இல்லை என்பது தெளிவானது.
இதனால், மறுபடியும் டிரைவருக்கு போனை போட்ட போலீசார், வழியில் தென்படும் போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணை ஒப்படைக்குமாறும் கார் டிரைவருக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
மகன் சடலம்: அதன்படியே, கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐமங்கலா போலீஸ் ஸ்டேஷனுக்குள் காரை கொண்டு சென்றார் டிரைவர்.. ஏற்கனவே அங்கே தயாராக நின்றிருந்த போலீஸார், சுசனா சேத்தை சுற்றிவளைத்து பிடித்தனர்.. அவர் கையிலிருந்த கனத்த சூட்கேஸையும் கைப்பற்றினர்.. அப்போதுதான் அதனை திறந்து பார்த்தபோது சுசனாவின் 4 வயது மகனின் சடலம் கிடந்தது..
ஹோட்டலிலேயே 4 வயது மகனை கொன்று, அந்த சடலத்தை சூட்கேஸில் அடைத்து வைத்திருந்தார் சுசனா சேத். இதையடுத்து, விசாரணைக்காக அந்த பெண்ணை கோவா அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
கருத்து வேறுபாடு: இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. இவரது கணவர் வெங்கட்ராமன் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.. வெங்கட்ராமன் ஏஐ டெவலப்பராக வேலை பார்த்து வருகிறார்.. தற்சமயம் பணிநிமித்தமாக இந்தோனேசியாவில் தங்கியிருக்கிறாராம்.. சமீப காலமாகவே, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது.. ஒரு கட்டத்தில் இந்த பெண்ணை டைவர்ஸ் செய்யவும் கணவர் முடிவு செய்திருக்கிறார்.. இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கலும் செய்துள்ளார்.
ஆனால், கணவரை டைவர்ஸ் செய்ய சுசனா சேத்துக்கு விருப்பமில்லை.. கோர்ட் வரை கணவர் சென்றுவிட்டதால், அவர்மீது சுசனா சேத், கோபத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள்.
ஓட்டல் ரூம்: இந்த சூழலில்தான், சுசனா சேத், கடந்த சனிக்கிழமை, வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே ஓட்டலுக்கு மகனுடன் சென்றிருக்கிறார்.. அந்த ஹோட்டலில் 2 நாட்கள் தங்கியிருக்கிறார். அப்போதுதான் ரூமுக்குள் மகனை கொலை செய்துமிருக்கிறார். மகனை கொன்ற தாயை போலீசார் கைது செய்ததுமே, இந்தோனேஷியாவிலுள்ள வெங்கட்ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக இந்தியாவுக்குத் திரும்புமாறு போலீசார் கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
சூட்கேஸ்: இந்த சுசனா சேத் "ஆனால், எதற்காக இவர் மகனை கொன்றார் என்று தெரியவில்லை.. தன்னுடைய வேலை விஷயமாக, கடந்த சில வருடங்களாகவே பெங்களூருவில் சுசனா சேத் தங்கியிருக்கிறாராம்.. விரைவில் இவர்களது விவகாரத்தில் தீர்ப்பு வரப்போவதாக தெரிகிறது. தான் எதிர்பார்த்ததற்கு மாறாக தீர்ப்பு அமைவதால், கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தாராம். அதனால், மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளவே கோவாவில் முயற்சித்திருக்கிறார்.
தற்கொலை முயற்சி: ஆனால் மகனை கொன்ற பிறகு, அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி தோல்வியில் அமைந்துவிட்டது. அதனால்தான், மகன் சடலத்துடன் பெங்களூருக்கு கிளம்பியிருக்கிறார். அப்போதுதான் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
6 நாள் காவல்: கைதான சுசனா சேத்தை, கோர்ட்டில் ஆஜர் செய்த போலீஸார், 6 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி பெற்றிருக்கிறார்கள்.. அதன்படி, போலீஸாரின் விசாரணையும் துவங்கி உள்ளது..
ஹோட்டல் ரூமில், சுவற்றில் ரத்தக்கறை இருந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் சுசனா சேத்திடம் கேட்டுள்ளார்கள்.. அதற்கு அவர், தற்கொலைக்காக தன்னுடைய கையை கிழிக்கும்போது, ரத்தம் சுவற்றில் தெறித்துவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 6 நாள் விசாரணை முடிவிலேயே, சுசனா சேத் கொலை செய்தது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
திறமைசாலி: சுசனா சேத் அடிப்படையிலேயே மிகச்சிறந்த திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் இருந்திருக்கிறார்.. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மேன் க்ளீன் மையத்தில் படித்திருக்கிறார்.. ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களில் இயந்திர கற்றல் என கிட்டத்தட்ட 12 வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் பெற்றிருக்கிறார்.
2021ம் ஆண்டிற்கான ஏஐ பிரிவில் டாப் 100 சிறந்த பெண்கள் லிஸ்ட்டில் இவரது பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கல்வி மட்டுமே அனைத்தையும் மாற்றக்கூடிய ஆயுதம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.. ஆனால், என்ன படித்து என்ன பலன்???
இருமல் மருந்து: குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.. குழந்தையை தலைகாணியிலோ அல்லது துணியிலோ அல்லது அல்லது ஒயரிலோ கழுத்தை இறுக்கி கொன்றிருக்கலாம் என்று ரிப்போர்ட்டில் தெரியவந்தது. ஆனால் கழுத்தை நெரித்ததற்கான காயங்கள் எதுவும் இல்லை என்றும் ரிப்போர்ட் வந்துள்ளதாம்.
குழந்தையை கொல்லப்பட்டு 36 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில் காலியான 2 இருமல் பாட்டில்களும் இருந்துள்ளன.. இந்த இருமல் மருந்தை குழந்தை தந்து, குழந்தை மயங்கியதும் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. தொடர் விசாரணை நடக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications