கட்டம் கட்டிய காங்கிரஸ் அரசு.. ராகுல் காந்தியை விமர்சித்து ட்வீட்.. பாஜக அமித் மால்வியா மீது வழக்கு
பெங்களூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பாஜக ஐடி குழு தலைவர் அமித் மால்வியா ட்வீட் பதிவிட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஐடி குழு தலைவர் அமித் மால்வியாவுக்கு எதிராக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமித் மால்வியா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதாவது, ராகுல் காந்தி ஆபத்தானவர், நயவஞ்சகமாக ஆட்டத்தை ஆடுகிறார் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதோடு 2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தியை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அமித் மால்வியாவின் இந்த ட்வீட் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். சமூக வலைத்தளங்களில் அமித் மால்வியாவை விமர்சித்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், கர்நாட மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் பாபு, அமித் மால்வியாவின் சர்ச்சை ட்வீட் குறித்து புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஹை கிரவுண் காவல் நிலையத்தில் பிரிவு 153 ஏ, 120 பி, 505(2) 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக உள்ளார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications