காதலியின் கல்யாணத்தை தடுத்து.. கழுத்தை அறுத்துக் கொண்ட ஒரு தலைக்காதலன்.. கல்யாண மண்டபமே ஷாக்
பெங்களூரு அருகே இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஒரு தலைக்காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே தூபகெரேயில் இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஒரு தலைக்காதலனை உறவினர்கள் கொடூரமாக தாக்கியதால், வெறுப்படைத்த அவர், அங்கேயே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு நகரில் இளம்பெண் ராதாவுக்கும் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது), இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர்கள் பேசி திருமணம் முடிவு செய்திருந்தார்கள்.
அதன்படி, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தூபகெரேயில் உள்ள திருமண மண்டபத்தில் ராதாவுக்கும் அவருடன் நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கும் வியாழக்கிழமை காலையில் உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலையில் முகூர்த்த நேரத்திற்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த நிதிஷ் என்ற இளைஞர் கல்யாண மண்டபத்திற்கு வந்திருக்கிறார். அவர், ராதாவை தான் காதலிப்பதாகவும், அதற்கு ஆதாரம் இதுதான் என்று ராதாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அங்கிருந்தவர்களிடம் நிதிஷ் காட்டினார்.

அதிர்ச்சி
தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய ராதா முயற்சிப்பதாகவும் மண்டபத்தில் பலரது முன்னிலையில் நிதிஷ் கூறினார். இதனால் திருமண மண்டபமே அதிர்ச்சி அடைந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பரபரப்பாக மாறினார்கள்.

உதைத்தனர்
ஆனால் ராதாவோ தான் நிதிசை காதலிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தான் நட்பாக தான் பேசியதாகவும் தெரிவித்தார். அதை காதல் என்று கூறி நிதிஷ் இங்கு வந்திருப்பதாகவும் கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நிதிசை பிடித்து அடித்து, உதைத்து கொடூரமாக தாக்க தொடங்கினார்கள்.

போலீசார் விசாரணை
இதனால் விரக்தி அடைந்த நிதிஷ் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நிதிசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் நிதிசும், ராதாவும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளனர். அதன்பிறகு 2 பேருக்கும் தொடர்பு இல்லையாம்.

பேசிய பெண்
சமீபத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்று சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்திருக்கிறார்கள் அதில், நிதிசும், ராதாவும் சேர்ந்துள்ளனர். இதனால் இளம்பெண்ணிடம் நிதிஷ் பேசியுள்ளார். தன்னுடன் ஒன்றாக படித்தவர் என்பதால் நிதிசுடன் ராதா பேசியிருக்கிறார். ஆனால் நிதிஷோ ஒருதலையாக காதலித்திருக்கிறார்.

சண்டை
இந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்தனர். இதுபற்றி அறிந்த நிதிஷ் திருமண மண்டபத்திற்கு வந்து தகராறு செய்தது தெரியவத்து. இந்த பிரச்சினையால் இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications