ஜஸ்ட் 5 நாளில் சொகுசுவீடு கட்டலாம்! பெங்களூரில் 3D கான்கிரீட் பிரிண்டிங் டெக்னாலஜி அறிமுகம்! எப்படி
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த நிறுவனம் 3 டி கான்கிரீட் அச்சிடம் இயந்திர தொழில்நுட்பத்துடன் குறைந்த விலையில் கண்ணை கவரும் வகையில் வெறும் 5 நாளிலேயே சொகுசு வீட்டை கட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் லட்சக்கணக்கில் பணம் என்பது வேண்டும். மேலும் குறித்த நேரத்தில் மணல், ஜல்லி, சிமெண்ட் உள்பட கட்டட பணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வேண்டும்.

இந்த பொருட்கள் இருந்தாலும் கூட ஒரு வீட்டை உடனடியாக நம்மால் கட்டி முடிக்க முடியுமா? என்றால் அது கேள்விக்குறித்தான். குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை ஆகும். இத்தகயை சூழலில் தான் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெறும் 5 நாளில் வீடு கட்டி முடிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
3 டி கான்கிரீட் தொழில்நுட்பம்: ஆம்... இது சாத்தியம் என்கிறது பெங்களூரில் இயங்கி வரும் அஜாக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம். இதற்காகவே இந்த நிறுவனம் 3டி கான்கிரீட் பிரிண்ட்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் தான் வெறும் 5 நாளிலேயே வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரி சுபப்பிரதா சஹா கூறியதாவது:
பாஜக மேலிடத்தை மிரட்டிய எடியூரப்பா? மகனுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்தது எப்படி? பசனகவுடா புதுகுண்டு
3 முதல் 5 நாளில் வீடு: ‛‛3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் விரைவாக வீட்டை கட்டி முடிக்க முடியும். இந்தியாவில் இதுபோன்ற 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்கிய முதல் கட்டுமான நிறுவனம் நாங்கள் தான். இதன்மூலம் 3 நாட்களில் 350 சதுர மீட்டர் வீட்டை 10 மீட்டர் நீளம், அகலத்தில் 9 மீட்டர் உயரத்தில் உருவாக்க முடியும். வழக்கமாக இதுபோன்ற வீட்டை ஆட்கள் கொண்டு கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் நாங்கள் 3 நாட்களிலேயே செய்து முடிக்கிறோம்’’ என்றார்.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு விழும் அடி.. லோக்சபா தேர்தலில்.. வெளியான கருத்து கணிப்பு
வீடு கட்டப்படுவது எப்படி: இந்த வீடு கட்ட 3 முக்கிய விஷயங்கள் தேவை. ஒன்று மெட்டீரியல், 2வது வீடு கட்டுவதற்கான மெஷின் மற்றும் சாப்ட்வேர், 3வது வீடு கட்டுவதற்கான திட்டமிடல். இதையடுத்து வீடு கட்டும் பிளானை அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேரில் வழங்குவார்கள். அது வீட்டின் டிசைனையை வழங்கும். இதையடுத்து வீடு கட்டும் மெஷின், சாப்ட்வேரில் இன்புட்டாக வழங்கப்பட்ட டிசைன்படி மெட்டீரியலை பயன்படுத்தி வீடு கட்டும். இந்த வீட்டின் சுவர் என்பது சிறியசிறிய லேயர்களாக இருக்கும். இந்த வீடும் இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தியுடன் பலமாகவே இருக்கும்.
வெளிநாடுகளில் பயன்பாடு: இந்த தொழில்நுட்பம் வெளிநாடுளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னையில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் 21 நாளில் சொகுசு வீடு கட்டியிருந்தனர். இத்தகைய சூழலில் தான் தற்போது பெங்களூரில் 3 டி பிரிண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடு கட்டி தரப்படும் என அஜாக்ஸ் என்ஜினியரிங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications