Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஷ்யூ பேப்பரில் "ஐ லைனரில்" எழுதி.. இருமல் மருந்தும் + இரும்பு பெண்ணும்: சிக்குகிறார் பெங்களூர் CEO

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சிஇஓ சுசேனா சேத் ஞாபகம் இருக்கா? ஹோட்டலில் ரூம் போட்டு, 4 வயது குழந்தையை கொன்று, சூட்கேஸில் அடைத்து.. போலீசில் சிக்கி.. இன்னும் இவரிடம் விசாரணை நடக்கிறதாம்.. குற்றப்பத்திரிகையும் இப்போதுதான் தாக்கலாகி உள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் சுசனா சேத்.. ஏ-1 ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தின் மிகப்பெரிய அதிகாரி.. நிறைய படித்தவர்.. எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், எங்கோ ஓரிடத்தில் சறுக்கிவிடுமே.. அப்படித்தான், இந்த பெண்ணுக்கும், தன்னுடைய கணவரின் மீது "ஈகோ" வந்துள்ளது.

Bengaluru CEO Suchana Seth case 642 charge sheet filed by Bangalore Police and 6 line Eyeliner note in the tissue paper

கணவர்: தாலி கட்டிய கணவர் மீது ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வெறுப்பு இருக்க முடியுமா? அதுவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் மீது இவ்வளவு வெறுப்பை உமிழ முடியுமா? என்ற ஆச்சரியத்தை இந்த பெண் கடந்த ஜனவரி மாதம் ஏற்படுத்தியிருந்தார்.

4 வயது மகனுடன் ஜனவரி 6ம்தேதி கோவாவில் ரூம் எடுத்து தங்கி, மகனையும் கொன்று, ஜனவரி 8ம் தேதி ரூமை காலி செய்துவிடடு பெங்களூர் தப்பி சென்றபோது போலீசில் சிக்கிவிட்டார்.

கருத்து வேறுபாடு: தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.. இருவருமே ஒரே கம்பெனியில் வேலை பார்த்தும் வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் மனைவியை விவாகரத்து செய்ய துணிந்தார் வெங்கட்ராமன். வெங்கட்ராமனுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உடனே தன்னுடைய குழந்தை, கணவனுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து தந்து, அவன் மயங்கி விழுந்ததுமே கழுத்தை நெரித்துள்ளதாகவும், இதனால், குழந்தைக்கு மூச்சு திணறி, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், அதை பார்த்தும்கூட, கழுத்தை இறுக்கி குழந்தையை கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

குழந்தை ஜாடை: உயிரிழந்த 4 வயது மகன், கணவர் வெங்கட்ராமன் போலவே இருப்பானாம்.. கணவர் ஜாடையில் குழந்தை இருப்பதாக சொந்தக்காரர்கள் அடிக்கடி சொல்வார்களாம். இதெல்லாம் சுசனா சேத்துக்கு எரிச்சலை தந்து வந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, மகனை செய்துவிட்டு, சுசானா சேத் தன்னுடைய கண் மையால் (ஐ லைனர்) ஒரு லெட்டர் போல எழுதியிருக்கிறார்.. டிஷ்யு பேப்பரில் அந்த 6 வரிகளை எழுதியிருக்கிறாராம்.. பிறகு அந்த பேப்பரை அங்கேயே கசக்கி போட்டுள்ளார். தடயவியல் சோதனையின்போது, ரூமில் இந்த பேப்பர் சிக்கியது.. உடனே டிஷ்யூ பேப்பரை சோதனைக்கும் அனுப்பியிருந்தார்கள்..

டிஷ்யூ பேப்பர்: அந்த பேப்பரில், "மகனை என்னுடன் வைத்து கொள்ள முடியாமல், கோர்ட் ஒருபக்கமும், என்னுடைய கணவர் இன்னொரு பக்கமும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.. இனிமேலும், என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று எழுதி வைத்திருக்கிறாராம்.

2 பாட்டில் இருமல் மருந்தை, மகனுக்கு தந்ததுடன், அவனை தூங்கவைக்க, சுசனா சேத் தாலாட்டு பாட்டு பாடினாராம்.. இதுவும் விசாரணையில் தெரிய வந்தது.இதெல்லாம் கேட்டு கோவா போலீசார், அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள். இது தொடர்பாக கலங்குட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

கோவா போலீஸ்: இந்தநிலையில், கோவா குழந்தைகள் கோர்ட்டில் சுசனா சேத்துக்கு எதிராக 642 பக்க குற்றப்பத்திரிகையை கலங்குட் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 கேஸில், இந்த பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவா காவல்துறை, இந்த வழக்கில் 59 சாட்சிகளை பெயரிட்டுள்ளது.. குற்றம் சாட்டப்பட்டவரின் கணவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், டிஷ்யூ பேப்பரில் ஐலைனரில் எழுதிய அந்த துண்டு சீட்டையும், குற்றப்பத்திரிகையுடன் போலீஸார் இணைத்திருக்கிறார்களாம்.. அந்த கையெழுத்து சுசனே சேத்துடையது என்று நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்களாம்.

குற்றச்சாட்டுகள்: இந்த வழக்கினை, கோவா குழந்தைகள் கோர்ட் வருகிற ஜூன் 14, 2024 அன்று விசாரிக்கும் என்றும், அப்போது சுசனா சேத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

ஆனால், கருணையின் நிழலாக, இரக்கத்தின் இன்னொரு அவதாரமாக, மன்னிப்பின் மறு உருவமாக, காலம் காலமாக பெண்கள் பார்க்கப்பட்டு வந்த நடைமுறைகள் எல்லாம், இதுபோன்ற கல்நெஞ்சுக்காரிகளால் சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+