6 லைன்.. "ஐ லைனரில்" எழுதி.. மகனுக்கு "தாலாட்டு" பாடிய சுசனா சேத்.. கூகுள் மேப் பார்த்த டிரைவர்: ஐயோ
பெங்களூரு: அந்த சூட்கேஸில் முதல்ல பெரிய பொம்மை இருந்தது.. அப்பறம் துணிகள் இருந்தன.. அப்பறம்தான் அந்த சடலம் இருந்தது" என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார், பெங்களூரு கார் டிரைவர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் என்ற மேதாவி பெண்ணுக்கு 39 வயதாகிறது. இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில், தன்னுடைய 4 வயது மகனுடன் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.

அப்போது தன்னுடைய மகனை கொன்றுவிட்டு, சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்து கொண்டு தப்ப முயன்றார்.. ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இதனிடையே அவரை பற்றின் புதுப்புது தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
கார் டிரைவர்: குறிப்பாக, இந்த வழக்கில் சுசனா சேத் கைதாவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் கார் கார் டிரைவர்தான். அவரது பேட்டி ஒன்று இணையத்தில் பரபரப்பை கூட்டி வருகிறது.
"காரில் சுசனா சேத்தை பெங்களூருவுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தேன். அப்போது கோவா மாநில கலங்குட்டே போலீசார் என்னை தொடர்பு கொண்டு கொங்கன் மொழியில் பேசினார்கள்.. உங்கள் காரில் உள்ள பயணி மீது சந்தேகமாக இருக்கிறது. பக்கத்தில் ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் இருந்தால் அங்கு காரை ஓட்டிச்சென்று, அங்கிருக்கும் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கூகுள் மேப்: உடனே நான் கூகுள் மேப், ஜி.பி.எஸ். உதவியுடன் அருகில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறதா என்று தேடினேன்.. ஆனால் எதுவுமே பக்கத்தில் இல்லை.. அதனால், வழியில் போலீசார் யாரும் இருக்கிறார்களா? சாலைகளிலும், செக் போஸ்ட்களிலும் பார்த்தேன்.. அங்கேயும் யாரும் இல்லை.
500 மீட்டர்: அதனால், போலீசாரின் அறிவுரைப்படி, இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு ஹைவேஸில் ஓட்டல்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பார்த்தேன். பிறகு ஒரு ஓட்டல் வந்தது.. அங்கு சென்று நான் சாப்பிடுவது போல் சென்று, அங்கிருந்தவர்களிடம் அருகில் போலீஸ் நிலையம் எங்கே இருக்கிறது? என்று கேட்டேன். அவர்கள் 500 மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், ஒன்றரை மணி நேரத்தில் பெங்களூருக்கு போய்விடலாம் என்றார்கள்.
அவர்கள் சொன்னதை போலவே, சித்ரதுர்கா மாவட்டத்திற்குட்பட்ட ஐமங்களா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன்.. போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டரை சந்திப்பதற்கு 15 நிமிடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதுவரையில் சுசனா சேத் காரில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். போலீசார் வந்து அவரது சூட்கேசை வாங்கி திறந்து பார்த்தனர். அப்போதுதான், சிறுவனின் உடலை நான் பார்த்து அதிர்ந்து போனேன்.
சிறுவன்: முதலில் ஒரு பெரிய பொம்மை, அதுக்கு கீழே துணிகள், அதுக்கு கீழே சடலம் இருந்தது. சிறுவனின் உடலை பார்த்ததுமே போலீசார், சுசனா சேத்திடம் "இது உங்களுடைய மகனா?" என்று கேட்டனர். அதற்கு அவர் "யெஸ்" (ஆமாம்) என்று பதற்றமே இல்லாமல் பதில் சொன்னார்.. மொத்தம் 10 மணி நேரம் என்னுடன் காரில் வந்தார்.. ஆனால், ஒரு வார்த்தைகூட என்னிடம் அவர் பேசவேயில்லை" என்கிறார் டிரைவர்.
மகனை செய்துவிட்டு, சுசானா சேத் தன்னுடைய கண் மையால் (ஐ லைனர்) ஒரு லெட்டர் போல எழுதியிருக்கிறார்.. ஆனால், டிஷ்யு பேப்பரில் அந்த 6 வரிகளை எழுதியிருக்கிறாராம்.. பிறகு அந்த பேப்பரை அங்கேயே கசக்கி போட்டுள்ளார்.

கையெழுத்து: தடயவியல் சோதனையின்போது, ரூமில் கசக்கி எறியப்பட்டிருந்த அந்த பேப்பரை கண்டெடுத்ததுடன், அவரது கையெழுத்து மாதிரியுடன் சேர்த்து, அவர் எழுதிய இந்த டிஷ்யூ பேப்பரை சோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அந்த பேப்பரில், "மகனை என்னுடன் வைத்து கொள்ள முடியாமல், கோர்ட் ஒருபக்கமும், என்னுடைய கணவர் இன்னொரு பக்கமும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.. இனிமேலும், என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று எழுதி வைத்திருக்கிறாராம்.
தாலாட்டு : அதுமட்டுமல்ல, 2 பாட்டில் இருமல் மருந்தை, மகனுக்கு தந்ததுடன், அவனை தூங்கவைக்க, சுசனா சேத் தாலாட்டு பாட்டு பாடினாராம்.. இதுவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதெல்லாம் கேட்டு கோவா போலீசார், அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications