பெங்களூரில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி.. கர்நாடகா அரசு பச்சைக்கொடி.. 17 நிபந்தனைகள் விதிப்பு
பெங்களூர்: 2026 ஐபிஎல் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கர்நாடகா அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான பிறகு கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் நடக்காத நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) சாம்பிபயன் பட்டத்தை வென்றது. 17 ஆண்டுகள் காத்திருந்து முதல் மறையாக ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து பெங்களூரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளை நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக மகளிர் உலகக்கோப்பைக்கான போட்டிகளும் பெங்களூரில் இருந்து மாற்றப்பட்டன. இந்நிலையில் தான் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் போட்டிகளை நடத்த அனுமதிக்கும்படி மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதல் என்பது 17 நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த 17 நிபந்தனைகளை பின்பற்றி தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் நீதிக்குழு விசாரணை நடத்தியது. அப்போது சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் அடிப்படையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். மேலும் முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அதனடிப்படையில் போட்டிகளை நடத்த போலீசார் 17 நிபந்தனைகளை வரையறை செய்து வழங்கி உள்ளனர். அந்த நிபந்தனைகளை பின்பற்றி நடத்த கர்நாடகா அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி போட்டிகளை நடத்தும்போது கூட்டத்தை கட்டுப்படுத்துவது, அவசரகால தயார் நிலை, நெரிசல் ஏற்படாத வகையில் மைதானத்துக்கு செல்லும் வழி, வெளியேறும் வழிகளை முறைப்படுத்துதல்,உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மைதானத்துக்கு வெளியே டிக்கெட் விநியோகத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்தல்,டிக்கெட் விற்பனைக்கும், மக்கள் வரிசையில் நிற்பதற்கு என்று தனித்தனி இடங்கள், மக்கள் பிரச்சனையின்றி மைதானத்துக்கு வெளியே சென்று வர ஏற்பாடு செய்தல், தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு கண்காணிக்கும் வசதிகள், வாகன நிறுத்தம், உள்பட 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதன்பிறகே போட்டிகளை நடத்த இறுதி அனுமதி வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications