தினமும் ரூ.100 கோடியை செலவு செய்யும் பெங்களூர் மாநகராட்சி! ஆனா பாருங்க.. ஒன்னும் மாறல!
பெங்களூர்: பெங்களூரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, கடந்த 2021-2022ம் ஆண்டில் மட்டும், தினமும் ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த செலவுகளுக்கு ஏற்றபடி பெங்களூரில் உருப்படியான ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
பெங்களூர் மாநகராட்சி செய்திருக்கும் செலவுகள் குறித்து, ஜனாக்ராஹா அமைப்பு முன்வைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

பெங்களூர் மாநகராட்சியின் மொத்த செலவு எவ்வளவு?
கடந்த 2021-2022ம் ஆண்டு மட்டும் ரூ.38,455 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இவ்வளவு பணம் செலவிட்ட பின்னரும், பெங்களூரில் இன்னமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. குண்டும் குழியுமான சாலைகள், மழை காலங்களில் வெள்ளமும், கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சமும் ஏற்படுகிறது. அப்படியெனில் செலவிட்ட தொகை என்ன ஆனது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
தினமும் ரூ.100 கோடி செலவு எனில், எதற்கெல்லாம் செலவு செய்யப்பட்டது என்பதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
செலவுகளில் வெளிப்படைத்தன்மை
கடந்த 2021-2022ம் ஆண்டு மட்டும் ரூ.38,455 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாக ஜனாக்ராஹா அமைப்பு கூறியிருக்கிறது. ஒதுக்கப்பட்ட தொகை, அதில் எவ்வளவு செலவு என்பதற்கான முறையான ஆதாரங்கள் இல்லை என இந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்த தொகை மொத்தம் மூன்று வகைகளில் செலவு செய்யப்படுகிறது.
1. பெங்களூர் மாநகராட்சி
2. மாநில அரசு துறைகள்
3. அரசு சார்ந்த நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மொத்த தொகையில் சுமார் 20%-ஐ மட்டும்தான் பெங்களூர் மாநகராட்சி செலவு செய்கிறது. மீதமுள்ள 80% தொகை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் செலவு செய்யப்படுகிறது. குறிப்பாக மின்சார வாரியமான பெஸ்காம் மட்டும் 47.3% அளவுக்கு செலவு செய்கிறது.
சரி செலவு பிரச்சனையில்லை, அதற்காக கணக்குகளை காட்டுங்கள் என்று கேட்டால், இந்த நிறுவனங்கள் வெறும் கையை காட்டுகின்றன.
முக்கிய சீர் திருத்தங்கள்
பெங்களூர் மாநகராட்சி அமைப்பு 80% வரவு செலவுகளை காட்டுகிறது. அதேபோல, குடிநீர் வாரியம் வெறும் 20% மட்டுமே கணக்கை காட்டுகிறது. ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட B-SMILE எனும் அமைப்புக்கு ஒரு செயல்பாட்டு இணையதளம் கூட கிடையாது. எனவே ஜனாக்ராஹா அமைப்பு 3 முக்கிய சீர் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
மாற்றம் வேண்டும்
1. அனைத்து பொது அமைப்புகளையும் ஒற்றை வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது
2. பெங்களூருக்கு என ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவது
3. பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் வரவு செலவுகளை பொது வெளியில் வெளியிடுவது
இப்படி செய்வதன் மூலம், எந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? அந்த திட்டம் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications