அட கடவுளே! உணவு டெலிவரி ஊழியருக்கு நாயால் வந்த சோதனை.. தீயாக பரவும் சிசிடிவி காட்சி- வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியருக்கு ஒரு நாயால் ஏற்பட்ட சோதனை சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கலகலப்பான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்குள் உணவு டெலிவரி நிறுவனங்கள் வந்தது முதலாகவே, வேலையில்லாமல் இருந்த பட்டதாரி இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் அவற்றில் ஊழியர்களாக சேர்ந்துவிட்டனர்.
இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து நகரங்களிலும் இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் வந்துவிட்டன. இங்கு டெலிவரி பாயாக வேலை செய்யும் ஊழியர்கள், காலை முதல் இரவு வரை தங்களுக்கு வரும் ஆர்டர்களை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும்.

மோசமாக நடத்தும் வாடிக்கையாளர்கள்
வீட்டில் இருந்து ஆர்டர் செய்தவர்களுக்கு வீட்டுக்கே வந்து உணவு வழங்கும் சேவைப் பணியை செய்து வரும் இந்த டெலிவரி ஊழியர்களுக்கு ஏனோ, நம் சமூகத்தில் பலர் உரிய மரியாதை கொடுப்பதில்லை. மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை ஒரு மனிதர்களாக கூட பலர் நடத்துவதில்லை என்பதே டெலிவரி ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உணவு எடுத்துச்செல்ல சற்று தாமதமானாலும் கூட அவர்களை மிக மோசமாக திட்டுவது, கொண்டு வந்த உணவை வேண்டாம் என திருப்பி அனுப்புவது போன்ற அவமானங்களை டெலிவரி ஊழியர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.

தினமும் அவமானம்
சிலர் இதற்கும் ஒரு படி மேலே சென்று, டெலிவரி ஊழியர்களை தாக்குவது, அவர்களை நாயை ஏவி துரத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு கூட, பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் உணவு வழங்க தாமதமானதால் அந்த ஊழியரை ஒரு பெண் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியது. பின்னர் அந்தப் பெண் தனக்கு தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த ஊழியர் மீது போலீஸில் புகார் அளித்ததும் பேசுபொருளானது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் டெலிவரி ஊழியர்கள் அன்றாடம் தங்கள் வேலையை முடிப்பதற்குள் பல அவமானங்களை எதிர்கொள்கின்றனர்.

நாயால் வந்த சோதனை
மனிதர்களால்தான் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு சோதனை என்று நினைத்தால், இங்கு ஒரு நாயால் வேடிக்கையான சோதனைக்கு டெலிவரி ஊழியர் ஒருவர் உள்ளாகி இருக்கிறார். பெங்களூரில் ஒரு வீட்டுக்கு உணவு கொடுப்பதற்காக ஒரு பிரபல நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் அங்கு செல்கிறார். அந்த வீட்டில் கேட் மூடப்பட்டிருப்பதால், அங்கிருக்கு காலிங் பெல்லை அடிக்கிறார். அதே நேரத்தில், அவரது பைக்கில் வைக்கப்பட்டிருந்த உணவு காற்றில் கீழே விழுந்து விடுகிறது. அதனை அங்கிருந்த நாயும் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது. இது தெரியாமல் அந்த ஊழியர் கேட்டின் முன் நின்று கொண்டிருக்கிறார்.

சிசிடிவியால் தெரியவந்த உண்மை
பின்னர் வாடிக்கையாளர் வருவது தெரிந்ததும், உணவை எடுக்க பைக் பக்கம் திரும்பினால் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு காணவில்லை. சில நொடிகளுக்கு முன்பு பார்த்த உணவு அதற்குள் எப்படி காணாமல் போனது என அதிர்ச்சியில், அவர் சுற்றி முற்றி பார்க்கிறார். ஹுஉம்.. அங்கு யாருமே இல்லை. அந்த நேரத்தில் அங்கு வாடிக்கையாளர் வர அவரிடம் இதனை பரிதாபமாக விவரிக்கிறார் டெலிவரி ஊழியர்.

கலகலப்பான கமெண்ட்
பிறகு அந்த வாடிக்கையாளர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்த போது தான், அவரது உணவை நாய் தூக்கிக் கொண்டு போயிருப்பது தெரியவந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த சோதனை தான் என்றாலும், இந்த விஷயத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்பதே உண்மை.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications