மதியம் 12 டூ 3 மணி வரை.. பெங்களூர் மக்களே வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. பேரிடர் ஆணையம் வார்னிங்
பெங்களூர்: பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
கோடைகாலம் தொடங்கி விட்டது. இதனால் நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பெங்களூருவும் விதிவிலக்கல்ல. பெங்களூரில் தற்போது தொடர்ந்து வெப்பம் அதிகரித்து செல்கிறது.
கடந்த 3 நாட்களாக படிப்படியாக வெயில் உயர்ந்து மதிய வேளையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது. இதனால் மதிய வேளையில் வீட்டில் மின்விசிறி, ஏசியை அதிகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரை
இந்நிலையில் தான் பெங்களூரு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: நகரில் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வெப்ப அலையால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஊடகங்கள் வழியாக வெப்பநிலை குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வெப்பத்தை தணிக்க தேவையான முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்படி தாகம் இல்லாவிட்டாலும் கூட அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்
மெல்லிய, தளர்வான, வெள்ளை நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது கண்ணாடிகள், தொப்பிகள், காலணிகள் அல்லது செருப்புகள் அணிந்து செல்ல வேண்டும். குடைகள் எடுத்து செல்ல வேண்டும். நீண்ட தூரம் பயணிக்கும்போது கையுடன் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்.
3 மணிநேரம் வெளியே வர வேண்டாம்
வெயிலில் வேலை செய்யும் நபர்கள் என்றால் தலை, கழுத்து, முகம், கை, கால்களில் ஈரத்துணியை பயன்படுத்தி அடிக்கடி துடைக்கலாம். லஸ்ஸி, சர்பத், எலுமிச்சை சாறு, மோர் பேன்ற பானங்களை பருகலாம்.
கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications