விபத்தில் சிக்கிய அம்மா.. WFH கேட்ட ஐடி பெண் ஊழியருக்கு ஷாக்.. இரக்கமில்லாத பெங்களூர் நிறுவனம்
பெங்களூர்: விபத்தில் சிக்கிய அம்மாவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரை கவனித்து கொள்ளும் வகையில் ஒரு மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற ‛வொர்க் ப்ரம் ஹோம்' கேட்ட பெண் ஊழியரிடம் ஆதாரங்களை தரும்படி பெங்களூர் ஐடி நிறுவனம் கோரியது. ஆதாரங்களை பெண் ஊழியர் அளித்த நிலையில் ஐடி நிறுவனம் போட்ட உத்தரவு தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தினமும் 12 மணிநேரம் கூட வேலை வாங்குகிறது. இருப்பினும் சம்பளத்துக்காகவும், பணியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகவும் 8 மணிநேரத்தை தாண்டியும் பணி செய்து வருகின்றனர்.

இதனால் பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாவதை நாம் பார்த்து இருப்போம். கேள்வி பட்டு இருப்போம். இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் ஐடி நிறுவனம் ஒன்றின் செயல் ஐடி ஊழியர்கள் மற்றும் நெட்டிசன்களை கடும் கோபமடைய செய்துள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
ஐடி ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவோர் தங்கள் நிறுவன சூழல்களையும், பணி நேரத்தில் எதிர்கொண்ட சவால்களையும் ‛ரெடிட்' என வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் r/india என்ற பெயரில் செயல்பட்டு வருபவர் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் கோபப்படுத்தி உள்ளது. ‛இந்தியாவின் பணி கலாசாரம் பைத்தியக்காரத்தனமாக உள்ளது' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛என்னுடைய மாமியார் மற்றும் அவரது சகோதரர் கடந்த வாரம் ஸ்கூட்டரில் பயணித்தனர். அப்போது விபத்து ஏற்பட்டது. என் மாமியாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது சகோதரருக்கு முகம், கையில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. என் மனைவியின் தங்கை பெங்களூரில் வசித்து வருகிறார். அங்கு அவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது தாய் மற்றும் மாமா ஆகியோர் விபத்தில் சிக்கியதால் அவர்களை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற தனது நிறுவனத்திடம் அனுமதி கோரினார்.
இதற்கு முக்கிய காரணம் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரது அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடியாது. இதனால் ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பதற்கா ‛வொர்க் ப்ரம் ஹோம்' கேட்டார். அதற்கு நிறுவனம் ஆதாரங்களை கேட்டது. இதையடுத்து எனது மனைவியின் தங்கை எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் போலீஸ் ரிப்போர்ட்டுகளை அனுப்பினார்.
அதனை பார்த்த நிறுவனம் மீட்டிங்கிற்கு அழைத்தது. அந்த மீட்டிங்கில் டீமில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அலுவலகத்தின் நிலைமையை அறிந்து அவர் விடுப்பு கேட்காமல் வீட்டில் இருந்து வேலை செய்ய தான் அனுமதி கேட்டார். மேலும் அவருடைய வேலையை எடுத்து கொண்டால் அலுவலகத்தில் இருந்து தான் பணியாற்ற வேண்டும் என்பதும் கிடையாது. வீட்டில் இருந்தும் கூட பணியாற்ற முடியும். ஆனால் நிறுவனம் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது.
இப்போது என்னுடைய மனைவி அவரது அம்மாவை கவனித்து கொள்கிறார். அதேபோல் இன்னொரு விஷயம் என்னவென்றால் எனது மாமியார் உடன் விபத்தில் சிக்கிய அவரது சகோதரருக்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு வேலைக்கு வரும்படி கூறிவிட்டனர். இப்போது அவரை ஒவ்வொரு நாளும் ஒருவர் அலுவலகம் அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகின்னறர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு எப்போது இரக்க குணம் இல்லை என்ற நான் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் அதனை உண்மையில் பார்ப்பது வித்தியாசமாக உள்ளது. மிகவும் அருவருப்பாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை பார்க்கும் பலரும் ஐடி நிறுவனத்தை கடுமையாக சாடி வருகின்றனர். இருப்பினும் அந்த பெண் எந்த ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது பற்றி பதிவிட்ட நபர் எதுவும் தெரிவிக்கவில்லை.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications