பெங்களூரில் ஏமாற்றப்பட்ட பெண்! இன்ஸ்டா வீடியோ வெளியிட்டு கதறல்.. மாதம் ரூ.4000 உயர்ந்த வீட்டு வாடகை!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவில் வாடகை வீடு தேடுவது என்பது குதிரை கொம்பான விஷயம், அதிலும் உங்களூடைய வீட்டு ஓனர் நல்லவராவும், நியாயமானவராகவும் இருந்தால் போன ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்துள்ளீர்கள் என அர்த்தம். அந்த அளவுக்கு பெங்களூர் வாடகை வீட்டு சந்தை மோசமாக உள்ளது.

பெங்களூரில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு தொடர்ந்து வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் இருக்கும் காரணத்தால், 1BHK, 2BHK வீடுகளுக்கு வருடம் முழுவதும் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். இந்த டிமாண்ட் தான் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைகிறது. குறிப்பாக அதிக வாடகை எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த டிமாண்ட் என்பது அமுத சுரபியாக பார்க்கின்றனர்.

bengaluru landlord rent hike dishaka instagram viral video bengaluru rent increase by 4000 bengaluru tenant landlord scam bengaluru rental market crisis landlord fake eviction reason bengaluru 1bhk rent 26000 instagram video rent hike bangalore bengaluru housing problem tenants landlord lies to increase rent viral video bengaluru landlord bengaluru it city rental issues tenant stories bengaluru rent bangalore rental exploitation dishaka bengaluru rent complaint 4000 1BHK

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பயனரான திஷாகா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், தனது வீட்டு உரிமையாளர் தற்போது செலுத்தும் வாடைகையை விட மாதம் ரூ.4,000 உயர்த்துவதற்காக பொய்யான காரணம் கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம், பெங்களூருவில் அதிகரித்து வரும் வாடகை பிரச்சனை மற்றும் வீட்டு உரிமையாளர்களின் அணுகுமுறை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வீட்டை காலி செய்ய சொன்ன ஓனர்

திஷாகா வெளியிட்ட வீடியோவில், முதலில் தனது வீட்டு உரிமையாளர் மிகவும் நம்பகமான காரணம் ஒன்றை கூறியதாக தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து வருவதால், அவர் தற்போது வசித்து வரும் வீட்டு அவருக்கு தேவையாக இருப்பதாக வீட்டு ஓனர் கூறியதாக விளக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த காரணம் உண்மையாகவே தோன்றியதாகவும், அதனால் வீடு காலி செய்ய வேண்டிய சூழல் வந்தத நிலையில், இதுக்குறித்து தொடர்ந்து நடந்த உரையாடல்களில் தான் உண்மையான காரணம் தெரிய வந்தது என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் திஷாகா-வை அதிகமாக குழப்பமடைய வைத்த விஷயம் என்னவென்றால், அந்த வீட்டு உரிமையாளர் முழு கட்டிடத்திற்கும் சொந்தக்காரர் ஆம், ஆனாலும் அவரை மட்டும் வெளியேறச் சொன்னது சந்தேகத்தை ஏற்படுத்தியது என்று திஷாகா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

திஷாகா-விடம் அந்த வீட்டு உரிமையாளர் நேரடியாகவே அந்த பகுதியில் உள்ள 1BHK வீடுகள் தற்போது ரூ.26,000 முதல் ரூ.28,000 வரை வாடகைக்கு விடப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், தன்னை வெளியேறச் செய்து அதிக வாடகைக்கு புதிய நபர்களை கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிந்துக்கொண்டார். இதை உணர்ந்த திஷாகா தொடர்ந்து அதே வீட்டில் தங்க வேண்டும் என்றால் மாதத்திற்கு கூடுதலாக ரூ.4,000 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக வாடகை பெறுவதற்காக பொய்யான காரணங்களை குறியுள்ளாதாக திஷாகா இந்த இன்ஸ்டா வீடியோவில் புலம்பியுள்ளார்.

4000 ரூபாய் கூடுதல் தொகைக்கு ஒப்புக்கொள்ள முக்கியமான காரணம், பெங்களூரில் புதிய வீட்டை குறுகிய காலத்தில் தேடுவது என்பது நடக்காத காரணம். அப்படி கிடைத்தாலும் அதிக வாடகைக்கு தான் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் என தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக வீட்டு வாடகை அதிகளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஐடி காரிடார் பகுதிகளில் 1BHK மற்றும் சிறிய அபார்ட்மெண்ட் வீடுகளுக்கே அதிக வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. புதிதாக வேலைவாய்ப்புகளுக்காக பெங்களூருக்கு வரும் இளைஞர்கள் அதிகரித்துள்ளதால், வீட்டு தேவை வேகமாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி சில பகுதிகளில் வீட்டு உரிமையாளர்கள் அடிக்கடி வாடகை உயர்த்துவதாக சமூக வலைதளங்களில் பல புகார்கள் வெளியாகி வருகின்றன.

திஷாகா பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. "பெங்களூருவில் வாடகை நிலைமை ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது? உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா?" என்ற கேள்வியுடன் அவர் வீடியோவில் கேட்டுள்ளார்

அதற்கு பலரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் திடீர் வாடகை உயர்வு, கூடுதல் டெபாசிட் கோரிக்கை மற்றும் வீடு காலி செய்ய அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+