தொழில் நஷ்டம்: மனைவி, மகனை தூக்கில் தொங்கவிட்ட நபர் கைது- பெங்களூருவில் அதிர்ச்சி

சீட்டு கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதால் 45 வயது நபர் ஒருவர் தனது மனைவி மகனை கொன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இந்த சம்பவத்தை அவரது மகள் செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை பலரது உயிருக்கு எமனாக அமைகிறது. பெங்களூருவில் 45 வயதான இளம் தொழிலதிபர் கடன் பிரச்சினையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். மனைவி தூக்குப் போட்டுக்கொண்டு உயிரிழந்தார். 12 வயது மகனை துடிக்க துடிக்க பேனில் தூக்குப் போட்ட போது அதை வீடியோ படம் எடுத்த மகள் அலறியதால் அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு. விபுதிபுரா பகுதியில் வசித்து வருகிறார். அவரது மனைவி கீதா பாய், இந்த தம்பதியினருக்கு 12 வயது மகனும், 17 வயது மகளும் இருக்கின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடன் கழுத்தை நெரித்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த கடனை கேட்டு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.

Bengaluru Man Kills Son Daughter Filmed Murder Neighbours Arrested After

ஒரு கட்டத்தில் அழுது கதற ஆரம்பித்தார் அந்த இளம்பெண். அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கீதாபாயும், சிறுவனும் மரணமடைந்திருந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கவே,எச்ஏஎல் காவல்நிலைய காவலர்கள் வந்து சுரேஷ்பாபுவையும் கொலையை வீடியோ எடுத்த அவரது மகளையும் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சுரேஷ் பாபு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சீட்டுக்கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள நினைத்தோம். ஆனால் எனது மகள் அழுது சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஒயிட்பீல்ட் டெபுடி கமிஷனர் அப்துல், பணப்பிரச்சினையில் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள நினைத்தனர். அக்கம் பக்கத்தினரின் தொடர் தொந்தரவுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து சுரேஷ் பாபு தவிர 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் வசிக்கும் மஞ்சு அவரது மகள்தான் வட்டிக்கு கடன் கொடுத்து தொந்தரவு செய்தவர்கள்.

செய்தியாளர் ஒருவரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ்பாபு கொலை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது மகளை வைத்து ஷேர் செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் மூவரும் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+