26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'அந்த' பெயர்? மமதா, கெஜ்ரிவால் எதிர்ப்பு!பெங்களூரில் இன்று அறிவிப்பு?
பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் பெங்களூரில் திரண்டுள்ள நிலையில் இந்த கூட்டணிக்கான பெயர் என்ன என்பது இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23-ந் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 26 கட்சிகள் பெங்களூரில் திரண்டுள்ளன.

26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று 2-வது நாள் கூட்டத்தில் எதையெல்லாம் விவாதிப்பது என ஆலோசிக்கப்பட்டது.
அஜெண்டா: இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது? பொது செயல் திட்டத்தை எப்படஉருவாக்குவது, அனைத்து எதிர்க்கட்சிகளும் எப்படி ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
கூட்டணி பெயர்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த பெயருக்கு மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் புதிய பெயர் ஒன்ற தேர்வு செய்வது தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என எதிர்க்கட்சிகள் கூட்டணி முன்னர் செயல்பட்டிருக்கிறது. இந்த பெயர்களை பிரதிபலிப்பது போல ஒரு புதிய பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுசெயல் திட்டம்: மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பொது செயல் திட்டத்தை உருவாக்க ஒரு துணை குழுவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நாட்டில் முந்தைய கூட்டணிகள் பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்கின்றன. அதனையே முன்னுதாரணமாக கொண்டு பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படலாம்.
ஒருங்கிணைப்பு: அத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து செயல்படுவதற்கான ஒரு தலைமை அலுவலகம் குறித்தும் இந்த தலைமை ஒருங்கிணைப்பு பணியை யார் மேற்கொள்வது என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறத என்கின்றன பெங்களூர் தகவல்கள்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications