கல்லூரி மாணவரை பார்த்ததும் போலீஸ்காரருக்கு வந்த விபரீத ஆசை.. இப்போது ஜெயிலில்.. அதிர்ச்சி சம்பவம்
பெங்களூர்: பெங்களூர் சுதந்திர பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர், அங்கு வந்த கல்லூரி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவரின் தாய் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூர் ஆர்டி நகர் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் யமுனா நாயக் . இவருக்கு வயது 30. இவர் பெங்களூர் சுதந்திர பூங்காவில் கண்காணிப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சுதந்திர பூங்கா என்பது பெங்களூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போராட்டங்கள் நடக்கும். அரசு ஊழியர்கள், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இங்கு அடிக்கடி போராட்டம் நடத்துவார்கள்.
இதனால் தான் எப்போதும் சுதந்திர பூங்காவில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அந்த வகையில் தான் போலீஸ்காரர் யமுனா நாயக் சுதந்திர பூங்காவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு பியூ கல்லூரியில் படிக்கும் மாணவர் வந்தார். அப்போது போலீஸ்காரர் யமுனா நாயக் அவரிடம் தவறாக நடந்துள்ளார்.
கல்லூரி மாணவரிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவர் அதிர்ச்சியடைந்தார். யமுனா நாயக்கிடம் இருந்து தப்பிய மாணவர் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார். தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தார். இதுபற்றி உடனடியாக உப்பார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் யமுனா நாயக்கை கைது செய்தனர்.
அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து யமுனா நாயக் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். யமுனா நாயக் இதுபோன்ற செயலில் இதற்கு முன்பும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அப்படி ஏதாவது குற்றத்தில் அவர் ஈடுபட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications